- Advertisement -
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா
-விளம்பரம்-
இதையும் படியுங்கள்: காரசாரமான மதுரை மட்டன் கறி தோசை இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
ஒன்று,இந்த சுவையான மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மட்டன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
ஆந்திரா மட்டன் சுக்கா| Andra Mutton Sukkaa Receipe in Tamil
வழக்கமான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். அசைவ வகையில் இந்த சுவையான மட்டன் சுக்கா ஒன்று,இந்த சுவையான மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 people
Calories: 938kcal
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 300 gm மட்டன்
- 10 சின்ன வெங்காயம்
- 1 tbsp மல்லி
- ½ tsp இஞ்சி பூண்டு விழுது
- ½ tsp மஞ்சள் தூள்
- 1½ tsp சோம்பு
- 2 tbsp மிளகு
- 1 tsp சீரகம்
- 3 வற்றல்
- 3 tbsp நல்எண்ணெய்
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு சிறிதளவு
செய்முறை
- மட்டன் சுக்கா செய்ய முதலில் மட்டனை நன்றாக கழுவி குக்கரில் மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 8 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- பின்னர் வேறு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, வற்றல் ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் வறுத்த கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்த அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வேக வைத்த மட்டனை அதில் சேர்க்க வேண்டும்.
- அதன் பின் அரைத்த மசாலாவை வேகவைத்த மட்டனில் சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேக வைத்த தண்ணீரை அதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
- தண்ணீர் வற்றிய உடன் சிறிது சிறிது நெய் சேர்க்க வேண்டும். இப்பொழுது சுவையான மட்டன் சுக்கா ரெடி.
Nutrition
Serving: 500gm | Calories: 938kcal | Carbohydrates: 43g | Protein: 69g | Fat: 22g | Saturated Fat: 6.4g | Polyunsaturated Fat: 11.3g | Monounsaturated Fat: 12.3g | Trans Fat: 7.3g | Cholesterol: 12mg | Sodium: 1321mg | Potassium: 1093mg | Fiber: 3.2g | Sugar: 6.5g | Calcium: 12mg