- Advertisement -
ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மதுரை மட்டன் பெப்பர் ப்ரை!
- Advertisement -
இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த மதுரை கறி தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மதுரை மட்டன் கறி தோசை | Madurai Mutton Curry Dosai Recipe in Tamil
ஹோட்டல்களில் செய்யக்கூடிய அளவுக்கு சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து குடும்பத்துடன் சாப்மிடலாம். சுவையான மதுரை கறி தோசை மதுரை சென்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.மதுரை சுவையில் வீட்டில் செய்து சாப்பிட்டு சுவைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 242kcal
Equipment
- 1 கடாய்
- 1 தோசைக்கல்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் கொத்து கறி ( மட்டன் )
- 1 கப் தோசை மாவு
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- 3 முட்டை
- 1/2 Tbsp இஞ்சி பூண்டு விழுது
- 1 Tbsp மிளகாய் தூள்
- 3/4 Tbsp மல்லி தூள்
- 1 Tbsp மிளகு தூள்
- 1/2 Tsp மஞ்சள் தூள்
- 1/2 Tbsp சீரக தூள்
- 3 Tbsp எண்ணெய்
- 1/2 Tsp கடுகு
- 1/2 Tsp சோம்பு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் கறியுடன் கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும். கறி நன்றாக பஞ்சாக வெந்திருக்க வேண்டும்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.முட்டையை அடித்து வைத்துக்கொள்ளவும்.
- பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளிக்கவும். கடுகு நன்றாக பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கவும்.
- பின்பு தக்காளியை போட்டு நன்றாக குழையும் வரை வதக்கவும். பின்பு மிளகு தூளை தவிர மற்ற அனைத்து தூள்களையும் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.
- அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து கொதிக்க விட்டு கெட்டியாக கூட்டு பதம் வந்ததும் இறக்கவும் (நீர்க்க இருக்க கூடாது).
- பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும்.
- பின்னர் லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும்.
- பிறகு அதன் மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.
- பிறகு அதன் மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும். ஒரு நிமிடம் கழித்து தோசையை எடுத்தால் சுவையான மதுரை கறி தோசை ரெடி.
Nutrition
Serving: 620G | Calories: 242kcal | Carbohydrates: 2g | Protein: 12g | Fat: 4g | Saturated Fat: 0.4g | Sodium: 21.5mg | Potassium: 614mg | Fiber: 0.02g | Sugar: 0.1g