Advertisement
அசைவம்

ருசியான மட்டன் சுவரொட்டி பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த ரெசிபி ஒரு தனி ருசி!

Advertisement

மட்டன் உணவுகள் மிகவும் சத்து மிக்க உணவுகள் மட்டனோட எல்லா பாகமும் உணவா பயன்படுது. அதிலையும் குறிப்பா குழந்தைகளுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் இரும்புச்சத்து அதாவது ஹீமோகுளோபின் குறைபாட சரி செய்வதற்கு அதிகமா தேடப்படுகிற ஒரு பொருள் அப்படினா சுவரொட்டி. முன்னாடி எல்லாம் சுவரொட்டி ரொம்ப சுலபமாக கிடைக்கும் இப்ப எல்லாமே முன்னாடியே புக் பண்ணி வச்சு வாஙட்டு இருக்காங்க சுவரொட்டி.

காரணம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கணும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக மட்டுமே. நிறைய இடங்களில் சுவரொட்டிகள் கிடைக்கிறது இல்லை அப்படி இந்த சுவரொட்டிகளில் அதிக அளவு இரும்பு சத்து கிடைத்தது. சுவரொட்டி அப்படின்னா இது  மண்ணீரல் ஆட்டு மண்ணீரல் இது ஆட்டோட மண்ணீரல்ல  நிறைய ஹீமோகுளோபின் அதிகரிக்க கூடி.

Advertisement

இரும்புசத்து இருக்கு. அதுதான் ஹீமோகுளோபின் உற்பத்தியாகுற இடம் மாதிரி எல்ல கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கும்போது அவங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் கம்மியா இருக்கிறது அதிகமாயிடும். அப்போ நம்ம எப்படி எடுத்துக்கணும்னா மண்ணீரல்ல  இது மாதிரி பிரட்டலோ,  வறுவலோ இல்ல நெருப்பில் சுட்டு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து அதுக்கப்புறம் வீட்ல செய்த எலுமிச்சை பழ ஜூஸ் குடிச்சிட்டோம்னா ஹீமோகுளோபில்லால நல்லாவே இன்க்ரீஸ் ஆயிடும்.

இதை கர்ப்பிணி பெண்கள் மட்டும் இல்ல எல்லாருமே இந்த மண்ணீரல் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மண்ணீரல் கொடுக்கிறது ரொம்பவே நல்லது. இதில் இருக்கிற அயன் உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்கக் கூடியது. ரத்தத்தை இன்க்ரீஸ் பண்ணறத்துக்கு இது ரொம்பவே உதவியா இருக்கும். அப்படி இந்த மண்ணீரல் பிரட்டல் எப்படி பண்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

மட்டன் சுவரொட்டி பிரட்டல் | Mutton spleen Stir Fry In Tamil

Print Recipe
இரும்புசத்து இருக்கு. அதுதான் ஹீமோகுளோபின் உற்பத்தியாகுற இடம் மாதிரி எல்ல கர்ப்பிணி பெண்களும் எடுத்துக்கும்போது அவங்களுக்கு ஹீமோகுளோபின் லெவல் கம்மியா இருக்கிறது அதிகமாயிடும். அப்போ நம்ம எப்படி எடுத்துக்கணும்னா மண்ணீரல்ல  இதுமாதிரி பிரட்டலோ,  வறுவலோஇல்ல நெருப்பில் சுட்டு சாப்பிட்டு
Advertisement
ஒரு மணி நேரம் கழித்து அதுக்கப்புறம் வீட்ல செய்த எலுமிச்சை பழ ஜூஸ் குடிச்சிட்டோம்னாஹீமோகுளோபில்லால நல்லாவே இன்க்ரீஸ் ஆயிடும்.
Course Fry
Cuisine tamil nadu
Keyword Mutton Spleen Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 354

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 ஆட்டு மண்ணீரல்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மண்ணீரலை கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். மண்ணீரலை வேக வைப்பதற்கு முன்பு நறுக்க வேண்டாம் . அப்படி நறுக்கினால் அதில் உள்ள ரத்தங்கள் எல்லாம் வெளியேறிவிடும் ஆகையால் வேக வைத்து விட்டு பிறகு தான் நறுக்க வேண்டும்.
  •  மண்ணீரல் வெந்த பிறகு அதை எடுத்து அதன் மேல் உள்ள தோலை நீக்கி விடவும். பின் மண்ணீரலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்ததும் அதில் பொடியாக வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதும் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் பொடியாக தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  
     பிறகு இதில் மஞ்சள் தூள் ,  மிளகாய்தூள் சேர்த்து கலந்து விட்டு பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள மண்ணீரலை சேர்த்து வதக்கி  தேவையானஅளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • மசாலாக்கள் பச்சை வாசனை போவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் , சோம்பு சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மசாலாக்கள் நன்றாக பச்சை வாசனை சென்ற பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி விட்டால் சுவையான மண்ணீரல் பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 மணி நேரம் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

10 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

11 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

15 மணி நேரங்கள் ago