இந்த கோடைகாலத்திலேயே மட்டன் எடுத்து உப்பு கண்டம் போட்டு வச்சுக்கோங்க!!

உப்பு கண்டம் ரெசிபி பெரும்பாலும் நிறைய பேரு செய்ய மாட்டாங்க ஒரு சிலர் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை உப்பு கண்டம் செஞ்சு பாத்தீங்கன்னா கண்டிப்பா எல்லாருமே இந்த உப்பு கண்டத்தை விரும்பி செஞ்சு வச்சுப்பீங்க. அதுவும் இந்த கோடை காலத்திலேயே நிறைய செஞ்சு வச்சுப்பீங்க. இத கறிவத்தல் அ

By Prem Kumar · 9/5/2025

உப்பு கண்டம் ரெசிபி பெரும்பாலும் நிறைய பேரு செய்ய மாட்டாங்க ஒரு சிலர் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை உப்பு கண்டம் செஞ்சு பாத்தீங்கன்னா கண்டிப்பா எல்லாருமே இந்த உப்பு கண்டத்தை விரும்பி செஞ்சு வச்சுப்பீங்க. அதுவும் இந்த கோடை காலத்திலேயே நிறைய செஞ்சு வச்சுப்பீங்க. இத கறிவத்தல் அப்படி கூட சொல்லுவாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க ஆனா இன்னைக்கு நம்ம ரொம்பவே சிம்பிளா இந்த உப்பு கண்டம் செய்யப் போறோம். இந்த உப்பு கண்டத்தை ஒரு சிலர் பீஃப்ல செய்வாங்க ஆனா பீஃப்ல செய்ய விருப்பம் இல்லாதவங்க மட்டன்ல செஞ்சுக்கலாம்.

மட்டன் வாங்கும்போதே உப்பு கண்டத்துக்கு அப்படின்னு கேட்டு வாங்கணும் அப்படின்னா அதுக்கு தகுந்த மாதிரி எலும்பு இல்லாம பெரிய பெரிய துண்டா குடுப்பாங்க. பெரிய பெரிய துண்டு வச்சு இந்த உப்பு கண்டம் செய்யும் போது வெயில்ல காயும் போது கொஞ்சம் ஓரளவுக்கு மீடியம் அளவில் நமக்கு உப்பு கண்டம் கிடைக்கும். ரொம்ப சிறிய துண்டுகள் போட்டு செஞ்சா வெயிலில் காயும் போது ரொம்ப சுருங்கி போயிடும். ஒரு சிலர் வெறும் மிளகாய் தூள் உப்பு எண்ணெய் ஊற்றி செய்வாங்க.

ஆனா இன்னைக்கு நம்ம இஞ்சி பூண்டு விழுது எல்லாமே சேர்த்து செய்றதால வாசனையா இருக்கும் இதுல கறி குழம்பும் செய்யலாம் அதே நேரத்துல வத்தல் மாதிரி வறுத்தும் சாப்பிடலாம். இத ஆறு மாசத்துக்கு ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம் ஒரு சிலர் ஒரு வருஷத்துக்கு கூட ஸ்டோர் பண்ணி வச்சுப்பாங்க ஆனா ஆறு மாசம் ஸ்டோர் பண்ணி வச்சிக்கிறது நல்லது. இந்த வெயிலுக்கு மூணு நாட்களில் சூப்பரா காய்ந்து விடும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பாக எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான மட்டன் உப்பு கண்டம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அரைத்து விட்ட மட்டன் குழம்பு

Recipes AMP · Quick view
View full