ரசம் பிடிக்காதவர்கள் கூட சூப் போல குடிப்பார்கள் ருசியான மைசூர் ரசம் இப்படி செய்து பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். இதில் நாம் சேர்க்கும் மிளகு, சீரகம், பூண்டு, ஜீரண சக்தி தரும். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுற
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற குழம்பு வகைகளில் இந்த ரசத்திற்கு எப்போதுமே முதலிடம் தான். இதில் நாம் சேர்க்கும் மிளகு, சீரகம், பூண்டு, ஜீரண சக்தி தரும். அது மட்டுமின்றி, உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் போது உடல் சோர்வை கூட நீக்கி சுறுசுறுப்பை தரும்.பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான மைசூர் ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு நெய்யில் வறுத்து ரசப்பொடியை அரைக்க அரைத்து செய்ய வேண்டும். இந்த ரசம் இப்படி வைக்கும் போது, அதன் சுவை வித்தியாசமாகவும், டேஸ்டியாவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு பத்தவே பத்தாது. நீங்கள் ஊற்றி ஊற்றி சாப்பிட்டு கொண்டே இருக்கக்கூடிய அளவிற்கு அருமையான சுவையில் இருக்கும்
வழக்கம் போல இல்லாமல் கொஞ்சம் புது விதமாக இந்த மைசூர் ரசம் செய்யப்போகின்றோம். மிஸ் பண்ணாம இந்த ரசத்தை செய்து ருசித்து பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். உடம்பே முடியல, ஆனா சுட சுட ஏதாவது சாப்பிடனும் போல இருக்குது அப்படின்னா இந்த ரசம் உங்களுக்கு கை கொடுக்கும். இந்த ரசத்தை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மனமான நெய்யில் வறுத்து அரைத்து பொடி சேர்க்கும்போது இன்னும் இந்த ரசத்தின் வாசம் அதிகமாகும்.