நாகர்கோவிலின் ருசியான மத்தி மீன் குழம்பு இப்படி செஞ்சி சாதத்துடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!
கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிக
கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர். ஆனால் கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். ஆனால் தற்போது இந்த மீன் எல்லா மாவட்டங்களிலும் கிடைக்கிறது. இன்று சூப்பரான நாகர்கோவில் ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக மீன் குழம்பு என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் மத்தி மீன் குழம்பு என்றால் எப்படி இருக்கும். மீன்களிலேயே மிகவும் சத்தானது மட்டுமின்றி, அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது, இந்த மத்தி மீன்கள். ஒரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, இந்த மீனுக்கு இந்த வேற ரேஞ்சுக்கு டிமாண்டு கூடிவிட்டது.
மத்தி மீனில் அதிகம் முள் இருந்தாலும் இதன் ருசி எப்போதும் தனித்துவமாக இருக்கும். மேலும், இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் டி, நியாசின் மற்றும் கால்சியம் ஆகியவை அதிகமாக உள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும். இந்த வார கடைசியில் இந்த மீனை வாங்கி இது போன்று செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அடுத்த முறையும் இது போல் உங்களை செய்து தர சொல்லி கேட்பார்கள்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!