Advertisement
அசைவம்

கமகமக்கும் ருசியான நண்டு மசாலா இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

ருசியான நண்டு மசாலா சுலபமாக செய்யும் முறை. நண்டு மசாலா ஒரு சுவையான அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள் : செட்டிநாடு நண்டு தொக்கு செய்வது எப்படி!

Advertisement

எந்த வகையாக இருந்தாலும். இந்த செய்முறையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் இப்போது நாம் நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

நண்டு மசாலா | Nandu Masala Recipe in Tamil

Print Recipe
ருசியான நண்டு மசாலா சுலபமாக செய்யும் முறை. நண்டு மசாலா ஒரு சுவையான அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். நண்டுகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. எந்த வகையாக இருந்தாலும். இந்த செய்முறையில் செய்தால் சுவையாக இருக்கும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் இப்போது நாம் நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nandu, நண்டு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 305

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 500 கிராம் நண்டு
  • 1 கப் தயிர்
  • 1/2 Tsp கடுகு
  • 15 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 Tsp சீரகம்
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • உப்பு தேவையான அளவு

மசாலா அரைக்க

  • 10 சின்ன வெங்காயம்
  • 3 Tbsp மல்லி தூள்
  • 1 Tbsp மிளகாய் தூள்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 Tsp சோம்பு

Instructions

  • நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது வாங்கும் போதே சுத்தம் செய்து வாங்கி கொள்ளவும்.
  • பின் சுத்தம் செய்த நண்டை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி கொள்ளுங்கள். பின் நாம் வைத்திக்கு தயிருடன் நண்டை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
    Advertisement
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்நததும் சின்ன வெங்காயம் சேர்த்து வதங்கி நன்கு வதக்கி நனகு குளிர வைக்கவும்.
  • பின் வதக்கிய வெங்காயம், பட்டை, கிராம்பு, சோம்பு, மல்லித் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து தனியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
  • அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு தயிருடன் ஊற வைத்த நண்டைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி 5 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • பிறகு வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். அருமையான சுவையுடன், வித்தியாசமான நண்டு மசாலா குழம்பு ரெடி.

Notes

 

Nutrition

Serving: 1200Gram | Calories: 305kcal | Carbohydrates: 4g | Protein: 20g | Fat: 2g | Cholesterol: 1mg | Sodium: 30mg | Potassium: 601mg | Calcium: 0.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

3 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

4 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

6 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

6 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

10 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

10 மணி நேரங்கள் ago