Advertisement
அசைவம்

செட்டிநாடு நண்டு தொக்கு செய்வது எப்படி!

Advertisement

விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், கடல் உணவுகளான மீன், நண்டு, இறால், போன்றவற்றையும் ருசித்து பாருங்கள். இந்த வார கடைசியில் இந்த செட்டிநாடு நண்டு தொக்கு செய்து ருசித்திடுகள்.

நண்டு வறுவல் | Crab Curry Recipe In Tamil

Print Recipe
விடுமுறை நாட்களில் எப்போதும் சிக்கன், மட்டன் என்று செய்து சுவைக்காமல், கடல் உணவுகளான மீன், நண்டு, இறால், போன்றவற்றையும் ருசித்து பாருங்கள். இந்த வார கடைசியில் இந்த செட்டிநாடு நண்டு தொக்கு செய்து ருசித்திடுகள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword crab curry, நண்டு வறுவல்
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 295

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ சுத்தம் செய்த கடல் நண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 குழிக்கரண்டி கடலை எண்ணெய்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மிளகுத்தூள்
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

செய்முறை:

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முதலில் இஞ்சி பூண்டு விழுது போட்டு அத்துடன் பச்சைமிளகாய் ஒடித்து போடவும்.
  • பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.
    Advertisement
  • வெங்காயம் பொன்னிறம் ஆனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இரண்டும் நன்றாக குழைய வதங்கியதும், தேவையான பொருட்களில் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.
  • இப்பொழுது உங்கள் சுவைக்கேற்ப தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி சுத்தம் செய்த நண்டுகளை சேர்த்து கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடுங்கள்.
  • நண்டில் இருந்து தண்ணீர் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடவும்.
  • இப்பொழுது சுவையான நண்டு வறுவல் தயார்.

Nutrition

Calories: 295kcal | Carbohydrates: 7.8g | Saturated Fat: 14g | Cholesterol: 99mg | Sodium: 1124mg | Potassium: 553mg | Fiber: 1.2g | Vitamin A: 5IU | Vitamin C: 54mg | Calcium: 11mg
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

16 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

10 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago