Advertisement
சைவம்

சுட சுட சாதத்துடன் பிரட்டி சாப்பிட ருசியான நெல்லிக்காய் துவையல் இப்படி செஞ்சி கொடுங்க!

Advertisement

உணவே மருந்து” என்ற வார்த்தைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுப்பொருட்களை எவரும் விரும்பி உண்பதில்லை. அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளருவதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும். எனவே அதிகளவு சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை ஏதாவது ஒருவகையில் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை சித்த வைத்தியத்தில் பெரும் பங்கினை வகிக்கின்றன. நெல்லிக்காயை பச்சையாக அப்படியே சாப்பிடலாம். நெல்லிக்காயின் துவர்ப்பு ,ஒரு வித கசப்பு தன்மையால் சிலர் அப்படியே சாப்பிட விரும்பமாட்டார்கள்.

Advertisement

அதனால் அதிலுள்ள அளவற்ற சத்துக்களைப் பெற, நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது. நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சாதம், நெல்லிக்காய் இனிப்பு என விரும்பிய மாதிரி உண்ணலாம். அந்த வகையில் இந்த இஞ்சி மற்றும் நெல்லிக்காயை வைத்து ஒரு சுவையான துவையல் அரைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிடுவார்கள். அந்தவகையில் இன்று நெல்லிக்காயில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நெல்லிக்காய் துவையல் | Nellikkaai thuvaiyal recipe in tamil

Print Recipe
உணவே மருந்து” என்ற வார்த்தைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுப்பொருட்களை
Advertisement
எவரும் விரும்பி உண்பதில்லை. அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பல இருக்கின்றன. ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. அந்த வகையில் இந்த இஞ்சி மற்றும் நெல்லிக்காயை வைத்து ஒரு சுவையான
Advertisement
துவையல் அரைத்துக் கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் தட்டாமல் சாப்பிடுவார்கள்.
Course thuvayal
Cuisine Indian
Keyword Nellikkaai thuvaiyal
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 5 பெரிய நெல்லிக்காய்
  • 3 வர ‌மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 4 பல் பூண்டு
  • புளி சிறிதளவு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிதளவு கல் உப்பு மற்றும் வரமிளகாய், சீரகம், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய நெல்லிக்காயை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • பின்னர் வதக்கி வைத்துள்ள அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு புளி வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெல்லிக்காய் துவையல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 1.3g | Protein: 8.3g | Fat: 0.9g | Sodium: 4mg | Potassium: 198mg | Fiber: 6.5g | Vitamin A: 290IU | Vitamin C: 600mg | Calcium: 25mg | Iron: 4.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

18 seconds ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

9 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

17 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

21 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago