புத்தாண்டு ராசிபலன்கள் 2025!!
மேஷம் மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் வரை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில்
மேஷம்
மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு மார்ச் வரை ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. சொந்த தொழிலில் லாபம் கிடைக்கக்கூடும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப உறவில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025ம் ஆண்டில் ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிலருக்கு இதயம், நெஞ்சு வலி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தொழில் பயணங்களின் போது புதிய தொழில் வாய்ப்புகள் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான முறையான ஒழுங்கு முறையை கடைப்பிடித்தால், எந்த விதமான நோயிலிருந்தும் ஈடுபடலாம். பயண வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வளாகத் தேர்வின் மூலம் வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசிக்கு மார்ச் மாதம் வரை கடினமான காலமாக இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய அளவு சாதகமற்ற சூழல் இருக்கும். அதன் பின்னர் அஷ்டம சனி உங்களுக்கு விலகுவதால் உங்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு சில சிக்கல்களை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியம் பெரிய பாதிப்பை ஏற்படக்கூடியதாக இருக்கும். ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு சாதகமான சூழல் இருந்தாலும், மார்ச் மாதத்திற்கு பின்னர் முதுகு வலி, மூட்டு வலி, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த வருடம் வாய்ப்பு கிடைக்கும். முதலீடு செய்வதில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பணத்தை சரியாக கையாள வேண்டும் இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
கன்னி
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு ராகு ஏழாம் வீட்டிலும், சனி ஆறாம் வீட்டிலும் சந்தேரிப்பதால் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிப்பதால், உங்கள் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். கணிசமான நிதி ஆதாயம் ஏற்படும். புதிய சூழலுக்கு சென்றால் அதற்கு ஏற்றார் போல் பழகிக் கொள்வது நல்லது. செய்யும் தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு பல விதத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். குருவின் பார்வை உங்கள் மீது விழுகிறது. மாணவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஏற்ற காலமாக இது இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதி நிலைமையில் வளர்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் இறுதி வரை சனியின் தாக்கம் நான்காம் வீட்டில் இருக்கும். இந்த காலத்தில் உங்களுக்கு மார்பு, எலும்பு, முதுகு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு புதிய கலையை கற்றுக்கொள்ள அல்லது புதிய திட்டத்தை தொடங்க இது ஒரு நல்ல நேரம். சனி பெயர்ச்சி தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயண வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் மற்றும் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் 15 முதல் மே 18, 2025 வரையிலான காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். சிலருக்கு மார்பு அல்லது இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். புதிய நண்பர்கள் அமைவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், படிப்பு அல்லது வேலை எதுவாக இருந்தாலும், நீங்கள் வெளிநாடு செல்ல நினைத்தால், இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரால் மனக்கவலை ஏற்படக்கூடும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆரோக்கியம் தொடர்பாக பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. பலருக்கும் வயிறு மற்றும் வாயு தொல்லை, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய மனை, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களிடம் அமைதியாக செல்வது நல்லது. உங்களுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.
கும்பம்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு மார்ச் இறுதிவரை சனியின் சஞ்சாரம் ராசியில் நடப்பதால், உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆன்மீக வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்ற தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப உறவுகளில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் மன நிம்மதி உங்களுக்கு அதிகரிக்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்
மீன ராசிக்கு 2025 ஆம் ஆண்டில் விரய சனியும், அதை தொடர்ந்து ஜென்ம சனி நடக்க உள்ளது. இதனால் உங்கள் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். வேலை, தொழிலில் போட்டியாளர்கள் குறைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியால் தொழில் மற்றும் செல்வம் அதிகமாக பெற போகும் ராசிக்காரர்கள்!!