வார ராசிபலன் – 02 நவம்பர் 2025 முதல் 08 நவம்பர் 2025!!

மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் வெளிநாட்டு பணி, தொழில் குறித்த சுபச்செய்திகள் வரும்.உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பணி கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர். பிறர் மதிக்கத்தக்க செயல்களைச் செய

By ·

மேஷம் 

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம்  வெளிநாட்டு பணி, தொழில் குறித்த சுபச்செய்திகள் வரும்.உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பணி கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் வெளிநாடு சென்று கற்பதற்குரிய ஆலோசனை கிடைக்க பெறுவர். பிறர் மதிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். குலதெய்வ தரிசனம் உண்டு. பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வீண் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம். 

ரிஷபம் 

ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் பழைய கடன்கள் தீரும். புதிய கடன்கள் வந்து சேரும். தைரியமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பான செயல் திறனை வெளிக்காட்டுவார்கள். மாணவர்கள் தாய் வழி உறவினர்கள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வர். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புண்டு. வேலை இல்லாதவர்க்கு புதிய வேலை கிடைக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட வாய்ப்பு உண்டு. வாகனங்களை விற்றுவிட்டு புதியது வாங்கும் வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம். திட்டமிட்ட காரியங்கள் செய்ய முடியாமல் தடைபடும்.

மிதுனம் 

மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் கிரக அமைப்புகள் திடீர் யோகத்தை தரும். ராசியதிபதி பகை வீட்டில் இருப்பதால் எதிலும் அவசரம் கூடாது. உத்தியோகஸ்தர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உயர் அதிகாரி ஆதரவால் நன்மை பெறுவர். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை புரிந்து பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். வீடு கட்டுதல் காலி மனை வாங்குதல் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். சிலர் புது வீடு கட்டி குடிபோகும் யோகம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பரஸ்பர அன்பு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பகை வேண்டாம்.

கடகம் 

கடகம் ராசியினருக்கு இந்த வாரம்  பெண்களால் ஆதாயத்தையும், வீடு, மனை வாகனங்களால் மன மகிழ்ச்சியையும் தருவார். எந்த விஷயத்திலும் நன்றாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த சிக்கல் ஒன்று விலகி எதிர்பார்த்த நன்மை கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் சாதனை படைப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. பேச்சில் மிகுந்த கவனம் தேவை. சகோதர உறவுகளோடு கருத்து வேற்றுமை வேண்டாம். சில நேரங்களில் திடீர் பண நெருக்கடி ஏற்படலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தால் கசப்புகள் ஏற்படலாம்.

சிம்மம் 

சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி கிடைக்கும். பேச்சில், இனிமை வசீகரம் கூடும். தகவல் தொடர்பு மூலம் நல்ல பல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகம் அல்லது மேலதிகாரிகளின் ஆதரவு அமோகமாக உண்டு. மாணவர்கள் பயிற்சி பட்டறை மூலம் தனித்திறன்களை வளர்த்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். பொருளாதார நிலையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்களும் உண்டு. ஆதாயம் தரும் தகவலால் மகிழ்ச்சி உண்டு. சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. பயணிக்கும் போது பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல்களில் சிறு ஏமாற்றமும் இருக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் செல்வாக்கும், சொல்வாக்கும் ஏற்படும். பயணத்தில், தகவல் தொடர்புகளில் நிதானம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீடு, மனை யோகம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவ, மாணவியர் கலை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று பரிசுகள் பல கிடைக்க பெறுவர். வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். முக்கியமானவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து லாபம் அடைவீர்கள். கோயில் தரிசனம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பாக்கியம் உண்டு. வெளியூர் பயணங்களில் அலைச்சல்களும், அதனால் உடல் நலக்குறைவும் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத தன யோகம் உண்டு. நினைத்த செயல்கள் நிறைவேறும் நல்ல நேரம். குடும்ப, பாக்ய அதிபதிகள் இணைவு திருமணம், குடும்ப விஷயங்களில் நன்மை தரும். மாணவர்கள் எதிர்கால நலனுக்கான புதிய தொழில்நுட்பம் அல்லது படிப்பை கற்கும் வாய்ப்பு ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் மற்றும் வேளாண் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து இதுவரை இருந்த சந்தேகங்கள் நிவர்த்தியாகும். புதிய வழி பிறக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளிடம் சரியானபடி நடந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம் 

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம்  பொருளாதார நிலையில், உறவுகளிடையே உயர்வு ஏற்படும். வெளியூர் திருத்தல தரிசனங்கள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியும் ஊக்கமும் கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும்.  உத்தியோகஸ்தர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். சிலர் வெளிநாடு செல்வர். மாணவர்கள் விளையாட்டு, தொழில்நுட்ப கற்றலுக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். சிலருக்கு வேலையில் இடம் மாற்றம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் தடங்கல்கள் ஏற்படும். குறித்த நேரத்தில் குறித்த வேலைகளை செய்ய முடியாத சங்கடம் வரும்.

தனுசு 

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் மனை வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலர் கடன் பெற்று வீடு, வண்டி வாகனங்களை வாங்குவர். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஏற்படும். மாணவர்கள் புதிய நண்பர்கள், தொடர்புகள் மூலம் எதிர்கால நலனுக்குரிய விஷயங்களை அறிவார்கள். தைரியம் அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சிறப்பான பதவிகள் தேடி வரும். சிலருக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கத்தான் செய்யும். கவனமாக செலவு செய்வதன் மூலம் பணப்பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரலாம். குடும்பத்தில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம் 

மகரம் ராசியினருக்கு இந்த வாரம்  நல்வாழ்க்கைக்குரிய புதிய பொறுப்புகள் ஏற்படும். செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணியிட மாற்றம் அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவியர்கள் புதிய சாதனை செய்து ஆசிரியர், பெற்றோருக்கு பெருமை சேர்ப்பார்கள்.‌ வருமானத்தை அதிகரித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இந்த வாரம் எதிலும் அகலக் கால் வைத்து மனக்குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். ஆரோக்கிய பிரச்னையில் கவனம் தேவை.

கும்பம் 

கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் குடும்ப பொருளாதாரம், சமூக மதிப்பு ஆகியவை மேம்படும். செலவு அதிகமானாலும் அதற்கேற்ற வரவு உண்டு. திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் தனித்திறன்களை மெருகேற்றும் வகையில் தொழில்நுட்ப பயிற்சி பெறுவர். மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கான வழிகாட்டுதல், நிதியுதவி கிடைக்கப் பெறுவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் நினைத்தபடி நடக்கும். சுபகாரியத்தடைகள் விலகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை அகலும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றங்களும் உண்டு. பிரயாண அலைச்சல்களைத் தவிர்க்கவும். பிறரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.

மீனம் 

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் காரிய தடைகள் விலக்கி நன்மை ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கை ஒளிவிடும். பயம் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமைக்கேற்ற, நன்மை கைமேல் கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வந்து வெற்றியைத் தரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பணிகளில் கூடுதல் சுமை உண்டு. சிலருக்கு உடல் நிலையில் கவனம் தேவை. தோல் பிரச்னைகளால் சற்று மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். 

இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் சுக்கிர பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை