வார ராசிபலன் – 19 அக்டோபர் 2025 முதல் 26 அக்டோபர் 2025 வரை!!

மேஷம் மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகளால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் புதிய சாதனை செய்வர். ஆரோக்கியத்தில் உற்சாகம

By ·

மேஷம் 

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகளால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டிலும், கல்வியிலும் புதிய சாதனை செய்வர். ஆரோக்கியத்தில் உற்சாகம் பிறக்கும். அதிகாரிகள் பாராட்டுவார்கள். நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்களும் அவர்களால் நடக்கும். வேலையில் புதிய மாற்றத்தையும் உபரி வருமானத்தையும் பெற வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு தொழிலில் சில சுணக்கங்கள் வரலாம். போட்டியாளர்கள் அதிகரிக்கலாம். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம் 

ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு சுற்றுலா செல்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு அல்லது வேறு இடத்தில் பணி வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கணினி, பொறியியல் தொழில்நுட்ப பயிற்சிகள் பெறுவர். உடன்பிறப்புக்கள் உதவும் வாய்ப்புண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வீடு தேடி வரலாம். குழந்தைகளின் நலன் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். சிலருக்கு எதிர்பார்த்த  இடமாற்றம் வரலாம். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. சகோதரர்கள் இடையே சண்டை சச்சரவுகள் வரலாம் அதனால் அனுசரித்து செல்லவும். 

மிதுனம் 

மிதுனம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய காலகட்டம் இது. செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறுவார்கள். மாணவர்கள் தொழில் நுட்ப, போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றி பெறுவர். பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து அமைதி பிறக்கும். சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். எதிர்பாராத செலவுகள் சில ஏற்படலாம். மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கடகம் 

கடகம் ராசியினருக்கு இந்த வாரம் விலகிய உறவுகள் தேடி வரும். புதிய பொறுப்புகளால் மனதில் தெம்பு உருவாகும். வியாபாரிகள் இந்த வாரம் தொழில் விருத்திக்குரிய விஷயங்களை செயல்படுத்துவர். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்பட்டு, வேலைப் பளு கூடும். மாணவர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று அவர்களுக்கு துணையிருப்பர். சிலருக்கு ஆதாயம் தரும் ஒப்பந்தங்கள் அமையும். அண்ணன் தம்பி உறவு முறைகள் சுமுகமாகும். சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு பயணங்கள் அதிகரிக்கும் அதனால் உடல் சோர்வு ஏற்படலாம். சில கவலைகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கலாம். சிலருக்கு இடமாற்றம் போன்ற நெருக்கடிகள் ஏற்படலாம்.

சிம்மம் 

சிம்ம ராசியினர் இவ்வாரம் எதிர்கால நன்மைக்கு உரிய விஷயங்களை செய்து கொள்வர். ஒருசிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரிகள் இவ்வாரம் முன்னேற்றப் பாதையில் புன்னகையுடன் நடப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பழைய சிக்கல்கள் அகன்று புதிய தெம்போடு பணிகளில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் படிக்கும் இடங்களில் தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது அவசியம். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வாய்ப்புண்டு. புதிய நகைகளை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். வாகனங்கள் பழுது படலாம். சிலருக்கு ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். இந்த வாரம் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு உண்டு. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களிடம் சொந்த கதைகளை பேசுவது கூடாது. ரியல் எஸ்டேட்டில் வெளிநாட்டுப் பங்குகளில் ஆதாயம் கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் மாணவர்கள் இரவு அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். உற்சாகம் குறைவில்லாமல் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். முக்கியஸ்தர்களின் நட்புறவு கிடைக்கும். சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

துலாம் 

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணிகளை தைரியமாக செய்யலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேறு நிறுவனத்தில் பணி கிடைத்தால் தயங்காமல் அதில் சேர்ந்துகொள்ளலாம். அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும். பூர்வீகச் சொத்து வில்லங்கங்கள் அகலும். பொருளாதார ஏற்றம் உண்டு. அரசாங்க அனுகூலங்கள் உண்டு. விருப்பங்கள் நிறைவேறும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

விருச்சிகம் 

இந்த வாரம் விருச்சிக ராசியினருக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏற்படும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். வியாபாரிகள் கடந்த கால பிரச்சினைகளிலிருந்து விடுபடுவர். உத்தியோகஸ்தர்கள் பணி சார்பான புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வார்கள். மாணவர்கள் நண்பர்கள் வீட்டு திருமண நிகழ்வுகளில் பரபரப்பாக செயல்படுவர். எதிர்பார்த்த திட்டங்கள் வேகம் பெறும். தடைகள் அகலும். சுபகாரிய முயற்சிகள் பலிக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. சிலருக்கு இட மாற்றங்கள் உண்டு. மனைவி வழியில் ஆதரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு உபாதைகள் ஏற்படலாம். 

தனுசு 

தனுசு ராசியினர் இந்த வாரம் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவர். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரிகள் புதிய மாற்றங்களை துணிச்சலாக செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் எதிர்கால முன்னேற்றத்துக்கான உத்திரவாதம் பெறுவார்கள். மாணவர்கள் உள்ளரங்க விளையாட்டுகளில் வெற்றி பெறுவர். வாகன யோகம் உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவார்கள். உறவினர்களால் கருத்து வேறு பாடுகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் உண்டு. யாருடைய பிரச்னையிலும் தலையிட வேண்டாம்.

மகரம் 

மகரம் ராசியினருக்கு இவ்வாரம் புதிய நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். பொருளாதார வரவால் மன நிம்மதி கூடும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, ஊதிய உயர்வு பெற்று மகிழ்வர். மாணவர்கள் சுற்றுலா செல்லும் இடங்களிலும் கல்வி சம்பந்தமான விஷயங்களை அறிந்து கொள்வர். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மனோதைரியம் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும் போது பேச்சில் கவனம் தேவை. ங்கள் கருத்தைச் சொல்லி விவாதத்தை வளர்க்க வேண்டாம். சுருக்கமாகப் பேசுங்கள். தொழிலில் கவனம் இல்லாவிட்டால், கடன்கள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம் 

கும்ப ராசினர் இந்த வாரம் சமூக மதிப்பு பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். குடும்பத்தில் பணம் வரவு அதிகரிப்பதால் பழைய கடன்கள் அடைபடும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களை நம்பாமல் அலுவலகப் பணிகளில் தாங்களே கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்தும் அளவிற்கு பாடங்களிலும் அக்கறை காட்ட வேண்டும். துணிச்சலோடு காரியங்களைச் செய்வீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி உறவுகளில் சிக்கல்கள் குறையும். தொழில் விஸ்தரிப்புக்காக கடன் பெற வாய்ப்புண்டு. விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்கள் பழுது பட்டு செலவு வைக்கும். அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டும்.

மீனம் 

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் தெய்வ அனுக்கிரகத்தால் தடைப்பட்ட பல காரியங்கள் நடந்தேறும். வியாபாரிகள் கடன் பெற்று செய்யும் தொழில் விரிவாக்க முயற்சியில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பிறரிடம் அதிகமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் பல விதங்களிலும் உதவுவர். எதிர்மறைத் தாக்கங்கள் குறையும் . உபரி வருமானத்திற்கு வழிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். பயணிக்கும் போது நிதானமாகப் பயணிக்கவும். செயல்களில் நிதானம் முக்கியமாக இருக்க வேண்டும். உடல் வலி அசதி சோர்வு அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!

Recipes AMP · Quick view
View full