வார ராசிபலன் – 26 அக்டோபர் 2025 முதல் 1 நவம்பர் 2025 வரை!!

மேஷம் மேஷம் ராசியினரை இந்த வாரம் நன்மைகள் நாடித்தேடி வரும். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்

By ·

மேஷம் 

மேஷம் ராசியினரை இந்த வாரம் நன்மைகள் நாடித்தேடி வரும். வாரத்தின் பிற்பகுதியில், சிலருக்கு கல்வி தொழில் சம்பந்தமான பட்டங்களும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மதிப்பு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி குறித்த செய்திகளை தேடிச்சென்று அறிந்து கொள்வார்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெகுகாலமாக பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த சுபகாரியங்கள் பூர்த்தி அடையும். ‌பேச்சில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம் 

ரிஷபம் ராசியினருக்கு இந்த வாரம் வண்டி வாகன, ஆபரணச் சேர்க்கை உண்டு. சிலருக்கு தொழிலில் சற்று தேக்க நிலை காணப்படும். எனினும் உங்கள் திறமையினால் அதை சிறப்பாக கையாளுவீர்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த ஆதாயங்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளை எழுதும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். தொழில் முயற்சி லாபகரமாக இருக்கும். சகோதர ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிலருக்கு பெண்களால் சில ‌நெருக்கடிகள் ஏற்பட்டு மன அமைதி இழக்கலாம். 

மிதுனம் 

மிதுனம் ராசியினர் இந்த வாரம் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவீர்கள். கடந்த வாரம் இருந்த சொத்து பிரச்சனைகளுக்கு இந்த வாரம் நல்ல முடிவு ஏற்படும். இதில் உங்கள் பக்கம் சாதகமானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். தனியார் உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டு அரசாங்க போட்டித் தேர்வுகளில் பங்கு பெறுவர். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. கடன்கள் கட்டுக்குள் அடங்கும். நினைத்த காரியங்கள், முயற்சிகளால் வெற்றி பெறும். ‌வீடு கட்டுதல், வீடு வாங்குதல் போன்ற தொழில்கள் மிகுந்த லாபத்தைத் தரும். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். வாகனங்கள் பழுது பட்டு செலவு ஏற்படும்.

கடகம் 

கடகம் ராசியினர் இந்த வாரம் புதிய தொடர்புகளை பெறுவார்கள். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்த இருபாலருக்கும் நல்ல வரன் அமைந்து திருமணம் நிச்சயம் செய்யும் வாரமாக அமையும். நீண்ட காலமாக வீடு, வாகனம் வாங்க திட்டமிட்டவர்களின் கனவு நிறைவேறும். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்திருந்த ஆதாயங்களை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்து மேல்படிப்பு குறித்து தீர்மானிப்பது நல்லது. சகோதர உறவுகள் சாதகமாகவும் உதவிகரமாகவும் இருக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கடன் பிரச்னையில் சிக்காமல் இருக்கவும். உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம்.

சிம்மம் 

சிம்மம் ராசியினர் இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான பல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்களுக்கான முன்னேற்பாட்டு உத்திகளை மேற்கொள்ளுங்கள். சிலர் வெளிநாட்டு சுற்றுலா மேற்கொள்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி பெருமூச்சு விடுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப விஷயங்களை தேடிச்சென்று கற்பார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய முயற்சியில் காலதாமதம் மற்றும் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் நிதானம் தேவை.

கன்னி 

கன்னி ராசியினர் இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டு நிம்மதி பெறுவீர்கள். எதிரிகள் விலகி, சிலர் வெற்றிக்கனி பறிக்கும் வாரமாக இருக்கும். உங்கள் செயல், முடிவுகள் மற்றவர்களுக்கு சாதகமான நிலை காணப்படுகிறது. அரசாங்க உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரி மூலம் நன்மைகள் கிடைக்கப் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனதில் நினைத்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்து அதில் இணைவார்கள். பணத்திற்குத் தட்டுப்பாடு வராது. கணவன் மனைவி கருத்து வேற்றுமைகள் மறையும். அன்றாட பணிகளில் அதிக கவனம் தேவை. கடைசி நேரத்தில் சில வாய்ப்புகள் நழுவலாம். கவனத்தைச் சிதற விடாமல் இருந்தால் வெற்றி பெறலாம். 

துலாம் 

துலாம் ராசியினருக்கு உற்றார், உறவினர்களால் மனதில் உற்சாகம் ஏற்படும். கடந்த சில வாரங்களாக மனதில் வைத்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயண எண்ணங்கள் இந்த வாரம் கைகூடும். பயணங்களில் சற்று கவனம் தேவை மனதில் உற்சாகம் பெருகும். அரசு துறை உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று வருவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். செய்யாமல் விட்ட பணிகள் ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கி விடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சிலர் எதை செய்தாலும் யோசித்துச் செய்யவும். அகலக்கால் வைத்து அவஸ்தைப்பட வேண்டாம்.

விருச்சிகம் 

விருச்சிகம் ராசியினருக்கு, புதிய நம்பிக்கைகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மழலை ஒலி கேட்கும். குழந்தைகளின் மேல்கல்வித் திட்டங்களில் ஏற்பட்ட சுணக்கம் நீங்கி, திட்டத்தை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். தனியார் மற்றும் அரசு துறை உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளை பெறுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் உள்ள கசப்புக்கள் மறையும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு வருமானம் அதிகரித்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டு. பெண்களால் பிரச்னை உண்டு. 

தனுசு 

தனுசு ராசியினர் இந்த வாரம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவர். எதிரிகள் தவுடு பொடி ஆவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாரத்தின் முற்பகுதியில் சற்று கவனமுடன் செயல்படுங்கள். சில முக்கியமான விஷயங்களில் இழுபறி நிலை காணப்படும். அரசு மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மேல் படிப்பு குறித்த தீர்மானமான முடிவை எடுப்பார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் வேலை கல்வி நிலைகளில் முன்னேற்றம் உண்டு. சிலருக்கு ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டு.

மகரம் 

தொழில் சம்பந்தமாக வெளிநாடு அல்லது தொலைதூரத்தில் இருந்து மிக சாதகமான செய்திகள் வந்து சேரும். அனுகூலமான வாரமிது. மூத்த சகோதரி, சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். மகரம் ராசியினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு நிர்வாகத்தில் மதிப்பு பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய விளையாட்டுகளை கற்றுக் கொள்வதில் உற்சாகமாக இருப்பார்கள். மங்கள காரியம் நடக்க வாய்ப்புண்டு. கணவன் மனைவி உறவுகள் அந்நியோன்யமாக இருக்கும். சிலர் எதிலும் பேராசைப்படாமல் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.

கும்பம் 

கும்பம் ராசியினர் இவ்வாரம் மனதில் உறுதியுள்ள மனிதர்களாக உலா வருவார்கள். பொருளாதாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் கிட்டும். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்கள் அனைத்துப் பணிகளிலும் நேரடியாக இறங்கி செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி குறித்த தகவல்களை பெற வெளியூர் பிரயாணம் செல்வார்கள். சகோதரர்களால் ஒத்துழைப்பு உண்டு. வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகம் உண்டு. உத்தியோகத்துக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். சிலருக்கு குடும்பப் பிரச்னைகள் அதிகரித்து கணவன், மனைவி ஒற்றுமை சீர்குலையும் சூழ்நிலை உண்டு.

மீனம் 

மீனம் ராசியினர் இந்த வாரம் மகிழ்வுடன் இருப்பீர்கள். சிலருக்கு ஆரோக்கிய மேம்பாட்டுக்கான முக்கிய செலவுகள் மேற்கொள்ளும் வாரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் வென்று கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். சுய முயற்சி வலுவாக இருந்தால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியங்களில் நல்ல முடிவு ஏற்படும். வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு இடமாற்றம் போன்ற நெருக்கடிகள் ஏற்படலாம். மனதில் இனம் புரியாத கவலை இருக்கும். தேவையில்லாத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!

Recipes AMP · Quick view
View full