வார ராசிபலன் – 05 அக்டோபர் 2025 முதல் 11 அக்டோபர் 2025 வரை!!

மேஷம் மேஷ ராசியினருக்கு இந்த வாரம் ராசியதிபதி சஞ்சாரம் காரணமாக மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான விஷயங்களில் அதிக ஆர்வக்கோளாறு கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்வி, வெளிநாட்டுப் பணி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் உதவி உண்டு

By ·

மேஷம் 

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் ராசியதிபதி சஞ்சாரம் காரணமாக மனதிற்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்கள் பணி சம்பந்தமான விஷயங்களில் அதிக ஆர்வக்கோளாறு கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்வி, வெளிநாட்டுப் பணி குறித்த எண்ணங்கள் உருவாகும். நண்பர்களால் உதவி உண்டு. தெய்வ பலம் அதிகரிக்கும். சற்று விழிப்புணர்வோடு செய்தால் தொழில் நஷ்டங்களைக் குறைக்க முடியும். சுபகாரிய முயற்சிகள் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மனைகள் பத்திரப்பதிவு விஷயங்களில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத அபவாதங்கள் நேரலாம்.

ரிஷபம் 

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரக அமைப்புகளால் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து காரிய வெற்றி பெற வேண்டும். மாணவர்கள் விருப்பப்பாட தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான வெற்றி பெறுவர். எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். வழக்கு வெற்றியாகும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம் 

மிதுன ராசியினர் சனி ராகு ஆகிய கிரகங்களின் அமைப்பால் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். உத்தியோகஸ்தர்கள் உழைப்பி ற்கு ஏற்ற அங்கீகாரமும், ஊதிய உயர்வும் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோர் ஆதவுடன் புதுமையாக சிந்தித்து, திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரை யொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம் 

கடக ராசியினருக்கு, சனி, சுக்கிரன் ஆகிய கிரக அமைப்பால் இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை எதிர்கொள்வர். அலுவலகத்தில் பணிச்சுமைகளிலிருந்து விடுபடுவீர்கள். மாணவர்கள் யோகாசனம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை கற்கும் வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இந்த வாரம் வீண் செலவுகள் ஏற்படாது என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணத்திற்கான  முயற்சிகளை மேற்கொள்ளலாம். தாயாரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.

சிம்மம் 

சிம்ம ராசியினருக்கு குரு, சுக்கிர சஞ்சாரத்தால் இந்த வாரம் மனதில் நினைத்த காரியங்கள் எண்ணியபடியே நடந்தேறும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளை இவ்வாரம் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புதிய விளையாட்டு, தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வர். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கன்னி 

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் சுப பலம் பெற்ற ஆறாம் இடத்தால் திடீர் வெற்றி கிடைக்கும். வேலையற்றோருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உள்ள ரகசியங்களை காக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கூடுதல் கவனத்தோடு பாடங்களை படிக்க வேண்டும். பணவரவு தேவையான அளவுக்கு இருப்பதால் செலவுகளைச் சமாளித்து உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உடல்நலனில் கவனம் தேவை. தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். தந்தைவழி உறவினர்களுடன் சுமுகமான உறவு ஏற்படும்.

துலாம் 

துலாம் ராசியினர் இந்த வாரம் அமைதியாகவும், மௌனமாகவும் இருந்து காரிய வெற்றி பெற வேண்டும். உத்தியோகஸ்தர்கள் திடீர் செலவுகளை கடன் பெற்று சமாளிப்பர். இந்த வாரம் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். மாணவர்கள் சக நண்பர் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாக பங்கேற்பார்கள். குடும்பத்துடன் கலந்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் மகிழ்ச்சி தரும். தந்தையுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம் 

விருச்சிக ராசியினருக்கு ஆன்மிக, தர்ம காரியங்கள் மூலமாக இந்த வாரம் சமூக அந்தஸ்தும், மதிப்பும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களின் கூடுதல் வேலைப்பளுவை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வர். ஷேர் மார்க்கெட் துறையினர் எதிர்பார்த்த லாபத்தை இவ்வாரம் பெறுவர். மாணவர்கள் பெற்றோருக்கு உதவியாக பல்வேறு குடும்ப பணிகளில் ஈடுபடுவர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவது இழுபறியாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும்.

தனுசு 

தனுசு ராசியினர் இந்த வாரம் தேக்க நிலையிலிருந்து மீண்டு, புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி பெறுவர். உத்தியோகஸ்தர்கள் துறைசார்ந்த மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று மகிழ்வர். அரசாங்க வழிகளில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த மன உளைச்சல் நீங்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.

மகரம் 

மகர ராசியினருக்கு இந்த வாரம் காரியத்தடைகள் அகன்று, மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். வியாபாரிகள் அனுபவத்துடன் செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பதால், உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவர். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புதிய முதலீடுகளை தைரியமாக மேற்கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் தனித்திறமைகளை வெளிப்படுத்தி நல்ல பதிப்பெண்கள் பெறுவர். கடினமான வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. சக ஊழியர்களுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கும்பம் 

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் சுக்கிரன், குரு ஆகிய கிரக சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள், மனதில் நம்பிக்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் முன்னதாகவே திட்டமிட்டு தங்கள் பணிகளை செய்து முடிப்பர். புதிய முதலீடுகளை செய்தால் எதிர்கால நன்மை பெறலாம். மாணவர்கள் வேடிக்கை விளையாட்டுகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

மீனம் 

மீன ராசியினருக்கு சுக்கிரன், புதன் கிரக சஞ்சாரத்தால் அலைச்சல்களுக்கு பின்னர் காரிய வெற்றி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மனதிற்கு ஏற்ற சூழலில் பணியாற்றுவர். முதலீடுகளில் நல்ல லாபத்தை பெறலாம். மாணவர்கள் ஆசிரியர்களது ஆசிகளை பெறுவது தேர்வுகளின் வெற்றிக்கு வழிவகுக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு விசேஷங்கள் சாதகமாகும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

இதனையும் படியுங்கள் : உத்திர நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூர்ய பகவான் இனி இந்த ராசிகளுக்கு பணமழை தான்!!

Recipes AMP · Quick view
View full