Advertisement
சைவம்

இரண்டு மாதம் ஆனாலும் கெடாத வெங்காய தொக்கு செய்வது எப்படி ?

Advertisement

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத தொக்கு ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது.

இதையும் படியுங்கள் : காரசாரமான முட்டை சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் இன்று நாம் வெங்காய தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் வெங்காயத்துக்கு செய்தால் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். இன்று வெங்காய தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

வெங்காய தொக்கு | Onion Thokku Recipe in Tamil

Print Recipe
நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் வெங்காய தொக்கு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் வெங்காயத்துக்கு செய்தால் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். இன்று வெங்காய தொக்கு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Course Thokku
Cuisine Indian, TAMIL
Keyword Onion thokku, வெங்காய தொக்கு
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 25 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 40

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்
  • 1 கடாய்

Ingredients

அரைக்க

  • ½ KG பெரிய வெங்காயம் 
  • 40 கிராம் புளி 15 நிமிடம் ஊற வைக்கவும்
  • 3 tbsp மிளகாய் தூள்
  • 1 tbsp பெருங்காயத்தூள்

வதக்க

  • அரைத்த தொக்கு
  • 100 ML எண்ணெய்
  • 1 tbsp கடுகு                            
  • ½ tbsp சீரகம்
  • ¼ tbsp வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிது.

Instructions

  • முதலில் 40 கிராம் புளியை
    Advertisement
    ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு அதனுடன் அரை கப் அளவு தண்ணீரை சேர்த்து புளியை 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாம் எடுத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தின் தோள்களை நீக்கி நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு நாம் நீள்வாக்கில் வெட்டிய வெங்காயங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நம் ஊற வைத்த புளி தண்ணியும், புளியையும் சேர்த்து கொள்ளவும். இதனுடன் மூன்று டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரவென்று பதத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்க்கவும், பின் கடுகு நன்றாக பொரிந்தவுடன் கால் டீஸ்பூன் வெந்தயம் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் அரைத்து வைத்துள்ள தொக்கையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் இதன் கூட சிறிதளவு கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும். பின் இதனுடன் தேவையான அளவும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
  • வெங்காய தொக்கு காப்பி நிலத்திற்கு வரும்வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.அதன் பின் பிறகு கடாயை கீழே இறக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் இரண்டு மாதம் ஆனாலும் கெடாத வெங்காய தொக்கு தயாராகிவிட்டது இனி இதை நீங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

Nutrition

Serving: 4person | Calories: 40kcal | Carbohydrates: 9g | Protein: 1.1g | Fat: 0.1g | Sodium: 4mg | Potassium: 146mg | Fiber: 1.7g | Sugar: 4.2g
Advertisement
swetha

Recent Posts

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

1 மணி நேரம் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

2 மணி நேரங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

6 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

16 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

17 மணி நேரங்கள் ago