வாய்க்கு ருசியாக ஆரஞ்சு பழ ரசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட அபாரமாக இருக்கும்!

சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். நாம் என்னதான் ஏகபோக ருசியுடன் சமைத்து சாப்பிட்டாலும், நிறைவாக ரசம் வைத்து சாப்பிட்டால

By Prem Kumar · 3/10/2024

சாம்பார், புளிக்குழம்பு என சாப்பிட்டு அலுத்து போனாலும் சரி, தயிர் சாதமே சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் சரி, சமைக்க நீண்ட நேரம் இல்லையென்றாலும் சரி. அனைவரும் சட்டென செய்ய நினைப்பது ரசம் தான். நாம் என்னதான் ஏகபோக ருசியுடன் சமைத்து சாப்பிட்டாலும், நிறைவாக ரசம் வைத்து சாப்பிட்டால் தான் சிலருக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும்.

ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். ரசமானது நாம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் செய்வதற்கு பெரிதும் துணை புரிகிறது. ரசத்தில் புதினா ரசம், லெமன் ரசம், தக்காளி ரசம், நண்டு ரசம் என்று பல விதமான ரசம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வகையில் இன்று நாம் ஆரஞ்சில் ரசம் செய்ய உள்ளோம்.

ஆரஞ்சு பழத்தில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. தினம் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். இந்த ஆரஞ்சு ரசத்தை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் நலம் சரியில்லாத போது செய்து கொடுத்தால் நல்லது.

Recipes AMP · Quick view
View full