சொந்த வீடு அமைவதற்கான ஆன்மீக பரிகாரம்

சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கு நம்ம எத்தனையோ கோவிலுக்கு போய் அங்க நிறைய பூஜை வழிபாடு செய்தும் கூட அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களை செய்து பாருங்கள் நிச்சயமாக சீக்கிரத்திலேய

By Ramya · 20/8/2024

சொந்த வீடு கனவு நிறைவேறுவதற்கு நம்ம எத்தனையோ கோவிலுக்கு போய் அங்க நிறைய பூஜை வழிபாடு செய்தும் கூட அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களை செய்து பாருங்கள் நிச்சயமாக சீக்கிரத்திலேயே சொந்த வீடு கட்டும் யோகம் அமையும்.

சொந்த வீடு

என்னதான் நமக்கு நிறைய சொத்துக்கள் இருந்தாலும் சொந்தமாக வீடு இல்லை என்றால் அது மிகப் பெரிய ஒரு குறையாகவே இருக்கும். சொந்த வீடு வாங்க முடியவில்லை என்பது பலருடைய கனவாக ஏக்கமாக இருந்து கொண்டே இருக்கும் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று தொடங்கி பண பற்றாக்குறையால் வீட்டின் பணிகளை முடிக்க முடியாமல் நிறைய பேர் கஷ்டத்தில் இருப்பார்கள் அவர்கள் இந்த இரண்டு பரிகாரத்தை செய்து வரலாம்.

சொந்த வீடு அமைவதற்கு பரிகாரம்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று வீட்டின் அக்னி மூலையில் தென்மேற்கு மூலையில் ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றி மகாவிஷ்ணுவின் அவதாரமான வாமனரை மனதில் நினைத்துக் கொண்டு மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

வாமனருக்கு விளக்கு பரிகாரம்

மண்ணுக்குரிய திசை அக்னி திசை ஆகும். அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவானுக்கு உரிய திசை இந்த அக்னி திசை மூன்றடி மண் கேட்டு மூன்று உலகையும் அளந்தவர் வாங்கினேன். அதனால் அவர்களை நினைத்து வீட்டில் நெய்வேதியமாக பால்பாயாசம் படைத்து வழிபட்டு வந்தால் சீக்கிரத்திலேயே சொந்த வீடு யோகம் அமையும்.

நாணய விளக்கு

வீட்டில் பயன்படுத்தக்கூடிய காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு அல்லது வழக்கமாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு விளக்கை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வாசனையான வெள்ளை நிற பூக்கள் வைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை விளக்கிற்குள் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தட்டை எடுத்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மீது ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து நாம் தயார் செய்து வைத்த விளக்கையும் அதன் மேல் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இந்த விளக்கை காலையில் 6:00 மணி முதல் ஏழு மணிக்குள் ஏற்ற வேண்டும். இப்படி செய்து வருவது நீங்கள் வீடு கட்டுவதற்கான வழிகளை சீக்கிரம் கொடுக்கும் ஐந்து ரூபாய் நாணயம் குபேரனுக்குரியது எனவே குபேரனை நினைத்து இந்த விளக்கை ஏற்றிக் கொள்ளலாம்.

காலை 6 முதல் 7 வரையிலான நேரம் என்பது ஞாயிறு-சூரியன் திங்கள்-சந்திரன், செவ்வாய்-செவ்வாய் புதன்-புதன் வியாழன்-குரு வெள்ளி-சுக்கிரன் சனி-சனி என நவகிரகங்களில் பாவ கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களையும் குறிக்கின்ற ஹோரை நேரம் எனவே இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது நவகிரகங்களின் அருளை கொடுத்து பூமி யோகத்தை உண்டாக்கும்.

Recipes AMP · Quick view
View full