சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட ருசியான பாகற்காய் புளிக்குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன பாகற்காய் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பாகற்காயின் மகத்துவம் நம் அனைவ

By Prem Kumar · 9/11/2023

நாம் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று தான் புளி குழம்பு, இந்த புளிக்குழம்பு பல்வேறு வகையில் வேறு வேறு விதமான காய்கறிகளை வைத்து நாம் செய்து சாப்பிடுகிறோம். அதில் இன்று நாம் சின்ன பாகற்காய் புளிக்குழம்பு பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். பாகற்காயின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகற்காய் என்றாலே கசக்கும் என்று பலபேர் இதை சாப்பிட மாட்டார்கள்.

இந்த பாகற்காயை வைத்து நீங்கள் பொரியல் செய்து இருப்பீர்கள்..! ஆனால் குழம்பு செய்து இருக்கிறீர்களா..! ஆனால் பாகற்காய் குழம்பு வைத்தால், குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பது பலரது புலம்பல். காரணம், பாகற்காயில் உள்ள கசப்பு சுவை! பக்குவமாக, கசப்பு தெரியாமல் பாகற்காய் குழம்பு வைக்க முடியும். அதைச் செய்தால் குழந்தைகள் பாகற்காய் குழம்பையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள்.

இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சமன் செய்து குளுக்கோஸ் அளவி சீராக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி, சிறுநீரகப்பை, கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பாகற்காய் ஒரு அற்புத மருத்துவ காய்கறி. அதை பல்வேறு வகைகளில் நம்மால் சமைத்து சாப்பிட முடியும். அந்த வகையில் பாகற்காய் புளிக்குழம்பு, ருசியை தேடுபவர்களுக்கு நல்ல விருந்தாகும். வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதில் எப்படி குழம்பு செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full