செல்வ செழிப்பு பெருகுதற்கு பத்மாவதி தாயார் மந்திரம்!!

அனைவரும் மதிக்கும் வகையில் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் மனதில் இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே அந்த ஆசை நிறைவேறும் சில பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவே கிடைக்காது. பல பேர் முயற்சி செய்யும் போது தோல்வி அடைகிறார்கள். ஒரு சிலருக

By Prem Kumar · 1/11/2025

அனைவரும் மதிக்கும் வகையில் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் மனதில் இருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே அந்த ஆசை நிறைவேறும் சில பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவே கிடைக்காது. பல பேர் முயற்சி செய்யும் போது தோல்வி அடைகிறார்கள். ஒரு சிலருக்கு வியாபாரத்தில் பின்னடைவு ஏற்படும் வேலைகளில் முன்னேற்றம் ஏற்படாது. அப்படி இருக்கும்போது பத்மாவதி தாயாரை நினைக்க வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பத்மாவதி தாயார் வழிபாடுv

தினம் தினம் பத்மாவதி தாயாரை நினைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்த ஒரு வார்த்தையை சொன்னால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அதிகமாகவே கிடைக்கும். தினமும் உங்களுடைய வேலையை துவங்குவதற்கு முன்பாக பத்மாவதி தாயார் உடைய இந்த மந்திரத்தை கூறி பிறகு வேலையை தொடங்கினால் அந்த வேலை நிச்சயமாக வெற்றிகரமாக அமையும்.

மந்திரம்

ஓம் ஹ்ரீம் பத்மாவதியே வஷட்

இந்த ஒரு மந்திரத்தை தினமும் கூறினால் போதும் பத்மாவதி தாயார் உங்களுக்கு பல வரங்களை வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுப்பார். பத்மாவதி தாயாரை வசியம் செய்வதற்கு இந்த ஒரே ஒரு சக்தி வாய்ந்த மந்திரம் போதுமானது. உங்களுடைய கஷ்டங்களை பத்மாவதி தாயாரிடம் பகிர்ந்து கொண்டால் உங்கள் மனதில் உள்ள அனைத்து பாரங்களும் குறையும். உங்கள் தாயாரிடம் கூறுவது போல பத்மாவதி தாயாரிடம் கூறி பாருங்கள். ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும் பத்மாவதி தாயாரை எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த காரியத்தை செய்யுங்கள் நிச்சயமாக அதில் வெற்றி கிடைக்கும்.

இந்த மந்திரத்தால் கிடைக்கும் நன்மைகள்

வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்துமே உங்களுக்கு நன்மைகளாக மாறிவிடும். மனதிற்குள் நீங்காமல் இருக்கக் கூடிய குழப்பங்கள் அனைத்தும் தீரும். சந்தோஷம் பிறக்கும் வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்திடலாம் என்ற தைரியம் பிறக்கும். அந்த நம்பிக்கையே உங்களுடைய வாழ்க்கையை உயர்த்தும் பத்மாவதி தாயார் உடைய இந்த மந்திரத்தை முழு மனதோடு நம்பிக்கையோடு கூறி பாருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full