Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நக்கட்ஸ்கலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த பாலக் கீரை நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி.

நக்கட்ஸ்கலில் பல வகை உண்டு. அதில் முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை நக்கட்ஸ். நக்கட்ஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு மாலை நேர சிற்றுண்டி. அது மட்டுமின்றி இவை நாம் மாலை நேரங்களில் வழக்கமாக செய்து உண்ணும் சிற்றுண்டிகளுக்கு ஒரு அருமையான மாற்றும் கூட.

Advertisement

மேலும் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியம் நிறைந்ததாக மட்டுமில்லாமல் சுவையாகவும் இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு இந்த பாலக் கீரை நக்கட்ஸ் மிகவும் சரியான தேர்வு. இதனை நம் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். சிறிய உருண்டைகள் போல காட்சியளிக்கும் இவை பலரின் ஃபேவரைட் உணவாகும். மிகுந்த சுவையுடன் இருக்கும் இந்த பாலக் கீரை நக்கட்ஸ்சை அதே சுவையுடன் வீட்டில் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

பாலக் கீரை நக்கட்ஸ் | palak nuggets recipe in tamil

Print Recipe
தற்போது இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மத்தியிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் பர்கர், பிட்ஸா பட்டியலில் நக்கட்ஸுக்கும் இடம் உண்டு. பொதுவாகவே நக்கட்ஸ்கலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஒரு நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த பாலக் கீரை நக்கட்ஸ்சும் அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. நக்கட்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை
Advertisement
நேர சிற்றுண்டி. அதில் முட்டை நக்கட்ஸ், வெஜிடபிள் நக்கட்ஸ், மற்றும் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை நக்கட்ஸ். இதனை நம் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள்.
Course snacks
Cuisine Indian
Keyword palak nuggets
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 5 People
Calories 24.7

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் பாலக்கீரை
  • 1/2 கப் வேர்க்கடலை
  • 1 நறுக்கிய பச்சைமிளகாய்
  • 3 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • தேவையான அளவு உப்பு                             
  • 1 கப் பிரெட் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வேர்க்கடலையை மூன்று மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த வேர்க்கடலை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய பாலக் கீரை, பச்சைமிளகாய், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • கலந்து வைத்துள்ள கலவையை விரும்பிய வடிவில் நக்கட்ஸ்களாக செய்து கொள்ளவும்.
  • ஒரு‌ பாத்திரத்தில் கோதுமை மாவு, சிறிதளவு தண்ணீர், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • நாம் செய்து வைத்துள்ள நக்கட்ஸ்களை கோதுமை மாவு கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்த நக்கட்ஸ்களை சேர்த்து இரு புறமும் சிவக்க பொரித்து எடுக்கவும்.
  • பொரித்து எடுத்த நக்கட்ஸ்களை தக்காளி சாஸ் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக் கீரை நக்கட்ஸ் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 24.7kcal | Carbohydrates: 3.63g | Protein: 2.86g | Sodium: 79mg | Potassium: 558mg | Fiber: 2.5g | Vitamin A: 937IU | Vitamin C: 28.1mg | Calcium: 99mg | Iron: 2.71mg

இதையும் படியுங்கள் : மாலை நேரம் Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சிக்கன் பஜ்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

14 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

20 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago