Advertisement
சைவம்

பள்ளி பாளையம் காளன் வறுவல் ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

குறிப்பாக இந்த காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இந்த பள்ளிபாளையம் உணவு கொங்குநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உணவகங்களில் மிகவும் பிரபலமானது. இதில் பள்ளிபாளையம் சிக்கன், காளான், பனீர் போன்றவை அடங்கும். அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சில சமயத்தில் நாக்கிற்கு ருசியை தரக்கூடிய வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா.

Advertisement

அந்த சமயத்தில் மஸ்ரூம்மை வைத்து இப்படி ஒரு பள்ளிபாளையம் காளான் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது செய்வது மிக மிக சுலபம்தான். உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் பள்ளிப்பாளையம் காளான் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் காளான் வறுவல் | Pallipalayam Mushroom Fry Recipe In Tamil

Print Recipe
காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இந்த பள்ளிபாளையம் உணவு கொங்குநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள உணவகங்களில் மிகவும் பிரபலமானது. இதில் பள்ளிபாளையம்சிக்கன், காளான், பனீர் போன்றவை அடங்கும். அசைவம் சாப்பிடாமல் இருக்கும் சில சமயத்தில்நாக்கிற்கு ருசியை தரக்கூடிய வேறு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா..அந்த சமயத்தில் மஸ்ரூம்மை
Advertisement
வைத்து இப்படி ஒரு பள்ளிபாளையம் காளான் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.இது செய்வது மிக மிக சுலபம்தான். உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்றுதெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் பள்ளிப்பாளையம் காளான் ப்ரை ரெசிபியின் எளியசெய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
Course starters
Cuisine tamil nadu
Keyword Pallipalayam Mushroom Fry
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 902

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 10 கிராம் சிவப்பு வரமிளகாய்
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 200 கிராம் காளான்
  • 2 சிறிய துண்டுகள் இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்
  • 1/2 கரண்டி சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • கொத்தமல்லி தேவையான அளவு

Instructions

  • முதலில் வர மிளகாயில் இருக்கும் விதைகளை எடுத்து விட்டு தனியாக ஒரு தட்டில் இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பின் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு தோல் நீக்கிய வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் கழித்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • காளான் நன்கு வதங்கியதும் நாம் எடுத்து வைத்திருக்கும் மசாலாவை அதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை தட்டு போட்டு மூடி வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் கொத்தமல்லியை தூவி அடுப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பள்ளிபாளையம் காளான் வறுவல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Sodium: 1092mg | Potassium: 782mg | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

3 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

4 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

8 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

17 மணி நேரங்கள் ago