எதிர்பாராத பண வரவை ஏற்படுத்தக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம்

பணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது எல்லாம் பணம் இருப்பவர்கள் எல்லாம் வேற்று கிரகணத்திற்கு கூட செல்ல முடியும் என்ற சூழல் உண்டு. அந்த அளவிற்கு பணம் இன்றி அமையாததாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் நேர்மையான முறையில்

By Prem Kumar · 7/9/2024

பணம் இருப்பவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது எல்லாம் பணம் இருப்பவர்கள் எல்லாம் வேற்று கிரகணத்திற்கு கூட செல்ல முடியும் என்ற சூழல் உண்டு. அந்த அளவிற்கு பணம் இன்றி அமையாததாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு நாம் நேர்மையான முறையில் உழைத்தாலும் கூட வரவுக்கு மேல் செலவாகி அந்த பணம் நம் கையில் தங்காமல் போய்விடும். அந்த வகையில் நாம் செய்யப்போகும் இந்த எளிமையான பரிகாரம் வாயிலாக எதிர்பாராத பண வரவுகள் நமக்கு வந்து சேரும். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரே அளவிலான ஆறு நாணயங்கள் நமக்கு தேவைப்படும் அதாவது ஒரு ரூபாய் என்றால் அதில் ஆறு நாணயங்கள் அல்லது இரண்டு ரூபாய் என்றால் அதில் ஆறு நாணயங்கள் அல்லது ஐந்து ரூபாய் என்றால் அதில் ஆறு நாணயங்கள் இதில் ஏதாவது ஒரு நாணயத்தை 6 எடுத்துக்கொண்டு வீட்டின் வடகிழக்கு மூலைக்கு சென்று அங்கே மண் இருக்கும் இடத்தில் அல்லது மண் இல்லாத சூழலில் ஒரு தொட்டியில் மணலை வைத்து கொள்ள வேண்டும் பிறகு எடுத்து வைத்துள்ள இந்த ஆறு நாணயங்களையும் இடது கையில் வைத்துக் கொண்டு வலது கையால் நாணயங்களை மூடிக்கொண்டு ஓம் ஸ்ரீ ஓம் என்று மனதிற்குள் அறுபது முறை உச்சரிக்க வேண்டும். இப்பொழுது அந்த மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன் கைகளில் இருக்கும் நாணயங்களை அந்த மண் தொட்டியில் புதைத்து வைக்க வேண்டும்.

ஒரு செம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் காய்ச்சாத பால் ஒரு ஸ்பூனையும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் கலந்து அந்த நாணயங்களை புதைத்து வைத்துள்ள மண் தொட்டியில் ஊற்ற வேண்டும். இதேபோல் தினமும் செய்தால் எதிர்பாராத பண வரவுகள் நம்மை தேடி வரும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமையில் வரக்கூடிய சுக்கிர ஹோரையான காலை 6 மணியிலிருந்து 7 மணி அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணி இவற்றில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக எதிர்பாராத பணவரவு நம்மை தேடி வரும் நம்மிடம் உள்ள பணமும் பல மடங்கு அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்கள் கைவிட்டு சென்று பணம், தங்க நகை திரும்பி உங்கள் கைக்கே வர இதை மட்டும் செய்து விடுங்கள் போதும்!

Recipes AMP · Quick view
View full