பணம் அதிகமாக சேருவதற்கு செய்ய வேண்டிய நாணய பரிகாரம்

பணம் என்ற ஒன்றுக்காக மட்டுமே அனைவரும் கடினமாக உழைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். பணம் இல்லாதவர்கள் அதை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை நித்தமும் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம் பணம் இல்லாமல் எதையும் நம்மால் வாங்க முடியாது அது மிகப்பெரிய சக்தி என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது

By Ramya · 19/8/2025

பணம் என்ற ஒன்றுக்காக மட்டுமே அனைவரும் கடினமாக உழைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். பணம் இல்லாதவர்கள் அதை சேர்ப்பதற்கான வாய்ப்புகளை நித்தமும் தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். காரணம் பணம் இல்லாமல் எதையும் நம்மால் வாங்க முடியாது அது மிகப்பெரிய சக்தி என்பதை யாராலும் மறுக்கவும் முடியாது எனவே பணத்தை ஈர்ப்பதற்கும் சேர்ப்பதற்கும் எளிமையான பரிகாரம் செய்வது மிகவும் அவசியமானது. கடினமாக உழைத்தாலும் நம் கையில் பணம் தங்காமல் இருக்கும் நம் கையில் பணம் தங்கி விட்டாலே போதும் நம்மிடம் பணவரவு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் பணம் வீண் விரயமாகாமல் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு ஒரு சில எளிமையான பரிகாரங்கள் உள்ளது அந்த வகையில் இன்று நாம் மிக மிக எளிமையான பரிகாரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்

பணம் சேர பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை வழிபாடுகளை செய்துவிட வேண்டும். பிறகு ஒரு சிகப்பு நிற துணியில் மகாலட்சுமியின் அம்சமான சிறிதளவு கல் உப்பை வைத்து அதற்கு மேல் குபேரரின் அருளை பெறுவதற்கான அவருக்கு பொருந்திய ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். இவற்றை ஒரு முட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பு வைக்க வேண்டும்.

பரிகாரத்தை செய்ய வேண்டிய முறை

மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக மூட்டையை வைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து உங்களுடைய பண தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் பண பற்றாக்குறை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள் பிறகு அந்த மூட்டையை எடுத்து வீட்டின் வரவேற்பு அறையில் உள்ள வடக்கு கிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் வடக்கிழக்கு மூலை குபேர அம்சம் பொருந்தியது எனவே அந்த இடத்தில் வைப்பது நமக்கு பண ஈர்ப்பை அதிகரிக்கும். இந்த மூட்டையை அடிக்கடி மாற்ற தேவை இல்லை மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அனைத்தையும் மாற்றி விட்டு பழையதை யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக நல்லதே நடக்கும்.

Recipes AMP · Quick view
View full