Home ஆன்மிகம் வீட்டில் பணம் அதிகமாக சேர பெண்கள் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள்..!

வீட்டில் பணம் அதிகமாக சேர பெண்கள் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள்..!

என்னதான் ஒரு வீட்டில் ஆண் பெண் இருவருமே வேலைக்கு சென்று உழைத்தாலும் அந்த வீட்டில் நிர்வாக பொறுப்பு எல்லாம் பெண்கள் கையில் தான் இருக்கும். பெண்கள் தான் பொறுப்பாக பணத்தை சேமிப்பது போன்ற விஷயங்களை செய்வார்கள். அந்த வகையில் பெண்கள் என்னதான் பணத்தை சேமிக்க முயற்சி செய்தாலும் அவர்கள் செய்யும் ஒரு விஷயத்தால் பணம் சேர்வது அப்படியே நின்று விடுமாம். அது என்னவென்றால்

-விளம்பரம்-

புடவையை கட்டாமல் பீரோக்குள் சேர்த்து வைப்பது தான்

என்னதான் புடவை அதிகமாக இருந்தாலும் பெண்கள் இன்னும் அதிகமாக புடவையை வாங்கி சேர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். என்னதான் தினமும் பெண்கள் புடவை உடுத்தாமல் இருந்தாலும் வீட்டில் பீரோவில் அதிகமான புடவையை வாங்கி சேர்த்துக் கொண்டே தான் இருப்பார்கள். வீட்டில் புடவைகளை வாங்கி மடிப்பு கலையாமல் அப்படியே வைத்திருப்பதால் ஆன்மீகம் சம்பந்தமான சில பிரச்சனைகள் வருவதாக சொல்லப்படுகிறது அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பணம் ஒரே இடத்தில் தேங்கும்

மகாலட்சுமி தேவி ஒரே இடத்தில் இல்லாமல் சுழற்ச்சியாக சுழன்று கொண்டே இருப்பாள். அதுதான் நம் வீட்டிற்கு மிகவும் நல்லது. அதேபோல் நம் வீட்டில் வாங்கி அதனை பயன்படுத்தாமல் வீட்டிலேயே தேக்கி வைத்திருந்தால் பணம் வருவதும் அப்படியே தேங்கி போய் நின்று விடுமாம். எனவே வாங்கிய புடவையை ஒரு தடவையாவது உடுத்தி பிறகு அதனை பீரோக்குள் வைக்க வேண்டும்.

நிறைய பேருக்கு இதன் மூலமாக கூடவா பண வரவு குறைந்துவிடும் என்ற சந்தேகம் இருக்கும். ஆம் நம் வீட்டில் கட்டாமல் வைத்திருக்கும் புடவைகளாலும் நம் வீட்டில் பண கஷ்டம் வரும். எனவே புது புடவைகளை எல்லாம் ஒரு முறை கட்டி விட்டு பீரோக்கள் வைத்துப் பாருங்கள் அதன் பிறகு உங்கள் வீட்டில் சிறு மாறுதல்கள் தென்படும். நாம் வீட்டில் பெரிய நாட்கள் கட்டாத புடவையை வைத்திருந்தால் அதில் சில கெட்ட வாடை வரத் தொடங்கும்.

மரிக்கொழுந்து

அப்பொழுதும் ஏதேனும் ஸ்ப்ரே அல்லது மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய மரிக்கொழுந்தை வாங்கி ஒரு வெள்ளை துணியில் கட்டி அந்த புடவைக்குள் வைத்தால் நறுமணம் வீச தொடங்கும். இதனால் பண வசியம் கூட ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த மரிக்கொழுந்து நம் வீட்டிற்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக உங்கள் வீட்டில் கட்டாத புடவைகள் இருந்தால் அதனை கட்டி துவைத்து வைத்து விடுங்கள். பிறகு உங்களுக்கே மாற்றங்கள் தெரிய தொடங்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!