Home ஆன்மிகம் வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் அதிகரிக்க நாம் சமையல் அறையில் தவிர்க்க வேண்டிய தவறுகள்!

அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு முக்கியமான அவசியமான இடம் என்றால் அது சமையலறைதான். உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை கொண்டு வருவதில் சமையலறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சமையலறை உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தையும் பாதுகாக்கும் இடமாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் எத்தனையோ அறைகள் இருந்தாலும் சமையல் அறை முக்கியமானது. நம்முடைய சமையல் அறையை சரியாக வைத்திருந்தலே செல்வம் தானாக சேரும். செல்வத்தை பெருக்குவதில் அஞ்சறைப்பெட்டியின் பங்கும் அதிகம் இருக்கிறது. அஞ்சறைப்பெட்டியில் பொருட்களை குறைவில்லாது வைத்திருந்தாலே சகல ஐஸ்வர்யங்களும் வீடு தேடி வரும்.

-விளம்பரம்-

சமையலறை

பஞ்ச பூதங்களும் ஆட்சி செய்யும் இடம் சமையலறை. அதுவும் நெருப்பு அதிகம் புழங்கும் இடம், அந்த இடத்தில் காற்றும் தண்ணீரும் குறைவாக புழங்க வேண்டும் அப்போதுதான் அந்த வீட்டில் சகல செல்வங்களும் ஐஸ்வர்யங்களும் பெருகும். பழங்கால வீடுகளில் சமையலறை பெரியதாக இருக்கும். ஒருபக்கம் அமர்ந்து காய் வெட்டுவார்கள். ஒருபக்கம் சமையல் செய்வார்கள். இப்போது சமையல் அறை சுருங்கி விட்டது.

குப்பைத்தொட்டி

சமையலறையில் குப்பை தொட்டியை வைக்கக் கூடாது. ஏனென்றால் குப்பை தொட்டியில் தான் நாம் அனைத்து கழிவுகளையும் போடுவோம் அதிலிருந்து வரும் துர்நாற்றம் ஆனது வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலை கெடுத்து எதிர்மறையாற்றலை அதிகரிக்கச் செய்யும். அதனால் அந்தந்த நேரத்தில் சேகரிக்கும் சமையல் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். இது போல ஒரு நாள் முழுவதும் சேகரிக்கும் குப்பை கழிவுகள் சமையல் அறையில் இருந்தால் அங்கு அன்னபூரணியின் வாசம் குறையும். இதனால் வறுமை உண்டாகும். எனவே இந்த தவறை தெரியாமலும் செய்யாதீர்கள்.

துடைப்பம்

வாஸ்து சாஸ்திரத்தின் கொள்கைகளின்படி துடைப்பம் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் சமைக்கும் இடத்திலோ அல்லது சாப்பிடும் இடத்திலோ துடைப்பம் வைக்கக் கூடாது என்று வாஸ்து வழிகாட்டுகிறது, அது வீட்டில் உணவு தானியங்கள் குறைவதற்கு வழிவகுக்கும். இது குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தில் பின்னடைவுக்கும் வழிவகுக்கும்.

வாஷிங் மெஷின்

முன்பெல்லாம் துவைக்கும் இடம் என்று துவைப்பதற்கு தனியாக இடம் இருக்கும். ஆனால் இந்த காலத்தில் அப்பார்ட்மென்களில் வாஷிங் மெஷின் ஏரியா கிச்சனோடு ஒட்டி தான் அமைகிறது, இதை நம்மளால் தவிர்க்கவே முடியாது. ஆனால் நாம் உடுத்திய அழுக்கான துணிகளை சமையலறையில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் தரித்திரம் தான் ஏற்படும். அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு வாஷிங் ஏரியாவை மாற்றி அமைக்க வேண்டும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/krampu-parigaram-in-tamil/

உடைந்த பொருட்கள்

சமையலறையில் உடைந்து போன மற்றும் பயன்படுத்தாத பொருட்களைக் கட்டாயம் வைக்கக் கூடாது. இதுபோன்ற பொருட்கள் நமது வீட்டில் எதிர்மறையான ஆற்றல்களை வெளிப்படுத்தும். எதிர்மறையான ஆற்றல் வீட்டின் செல்வத்தைக் குறைக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. சமையலறையில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் கசிந்தால் அதை உடனே சரி செய்து விட வேண்டும்.

கூர்மையான பொருட்கள்

வீட்டில் நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்த, காயங்களை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் மற்றும் கத்தி ஆகியவற்றை தவிர்க்கவும். அவற்றை ஒரு டிராயரில் பாதுகாப்பாக வைக்கவும். உங்கள் பாதுகாப்பை முடிந்தவரை கவனித்துக் கொள்ளுங்கள். கத்திகள் அல்லது கூர்மையான பொருட்களை தொங்கவிடாதீர்கள். அது தீய ஆற்றலை கொடுக்கும்.

-விளம்பரம்-