அள்ள அள்ள குறையாத அளவிற்கு உங்களிடம் பணமும், செல்வம் சேர! இந்த ஒரு மாலை ரெடி பண்ண போதும்!

- Advertisement -

பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம் செய்ய வேண்டும். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பதுடன் அதை சேமிக்கவும் முடியும் புகழோடு வாழவும் முடியும்.

-விளம்பரம்-

புகழும் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். ஒரு சிலவருக்கு பணம் மட்டும் இருக்கும் புகழோ, செல்வாக்கோ இருக்காது. எனவே புகழுக்காக நிறைய பணத்தை செலவு செய்வார்கள். குறையாத செல்வமும் மங்காத செல்வாக்கும் அதிகரிக்க புகழும் தேடி வர சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். அது என்ன‌ பரிகாரம் என்பதைப்‌‌ பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம். கிராம்பு இருக்கும் இடங்களில் எல்லாம் பணம் புழங்கும் என்கிற ஒரு சூட்சமமான குறிப்பு உண்டு. கிராம்பு மூலிகை சத்து மட்டும் அல்லாமல் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அதி அற்புதமான பொருளும் கூட! பணத்துடன் இதை சேர்த்து வைக்கும் பொழுது பணம் வீண் விரயம் ஆகாது என்கிற நம்பிக்கையும் உண்டு.

- Advertisement -

செல்வ வளம் பெருக

கிராம்பு பணத்தை ஈர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது. இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமைகளிலும் தொடங்கலாம். இதற்கு மூன்று கிராம்பு மற்றும் ஒரு அகல் விளக்கு, ஒரு கற்பூரம் மட்டும் இருந்தால் போதும். கிராம்பு மற்றும் கற்பூரத்தை அகல் விளக்கில் வைத்து கற்பூரத்தை ஏற்றிக் கொள்ளுங்கள். கிராம்பை விளக்கில் எரிப்பதால் அதிலிருந்து வரும் மணமானது தெய்வீக தன்மையை பெறுகிறது. இதனை நாம் இரவு நேரத்தில் செய்யும் பொழுது இதில் இருக்கும் மனமானது வீடு முழுவதும் பரவி இருக்கும். இதனால் மகாலட்சுமி தாயார் நமது வீட்டில் வாசம் செய்வார். கிராம்பிற்கு இருக்கும் வசிய சக்தி நம்முடைய வேண்டுதல்களை பலிக்கச் செய்கிறது.

வாராகடன் வசூலாக

சாமி‌ கும்பிடும்‌ பொழுது மூன்று கிராம்புகளை எடுத்து ஒரு தட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின் 3 கிராம்புகளை எடுத்துக் கொண்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கும் பொழுது சேர்த்து அவற்றை எரித்தால் வரவேண்டிய பணம் வசூலாகி விடும். பின்னர் மகாலட்சுமியின் மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களுடைய பிரச்சினைகள் உடனே தீரும் என்பது ஐதீகம். கொடுத்த பணம் திரும்பி வராமல் இருந்தால் மகாலட்சுமியை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம்.

வெற்றி வசப்பட

தனிப்பட்ட காரியங்கள் நிறைவேறுவதற்கு கிராம்பு பரிகாரத்தை மேற்கொள்ளலாம். அதாவது நாம் முக்கியமான விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது இரண்டு கிராம்பினை தெய்வத்திற்கு முன்னால் வைத்து வழிபட்டு பின்னர் அந்த கிராம்புகளை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் போது உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதோடு மட்டுமின்றி, நாம் செல்லும் விஷயங்கள் வெற்றியுடன் முடியும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பிரிந்த உறவுகள் சேர

உங்களுடைய பொருளாதார நிலையை சரி செய்யவும், உங்களுடைய வருமானத்தை அதிகரிக்கவும் இந்த கிராம்பு உதவுகிறது. அதனால் தான் மகாலட்சுமிக்கு கிராம்பு மாலை சூட்டி வழிபடுவது உண்டு. கிராம்பை மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு போட்டு தொடர்ந்து நைவேத்தியம் படைத்து, நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால், தீராத கடனும் தீரும். யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களை நினைத்து இந்த கிராம்பு மாலை கோர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த கிராம்பை மாலையாக கோர்த்து மகாலட்சுமி தாயாரை வணங்கி அவருக்கு அணியும்பொழுது பிரிந்த உறவுகள் கூட ஒன்று சேர்ந்து விடுவார்கள். இந்த அளவுக்கு கிராம்புக்கு மாலைக்கு சக்தி உண்டு.