பண வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பஞ்சமி பரிகாரம்!!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகமாக காட்ட வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழில் சிறப்பாக அமைய வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பலவிதமான வேண்டுதல

By Prem Kumar · 10/12/2025

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகமாக காட்ட வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழில் சிறப்பாக அமைய வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை மேற்கொள்ளுவோம். அதே போல் பஞ்சமி அன்று வராகி அம்மனே நினைத்து வழிபாடு செய்தால் அந்த வேண்டுதல் நிறைவேறும். அப்படி வேண்டும் பொழுது சில தாந்திரீக பரிகாரத்தை செய்தோம் என்றால் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும் அந்த வகையில் பணவரவை அதிகரிக்கவும் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும் பண வசியம் ஏற்படவும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம்.

பணத்தின் முக்கியத்துவம்

பணம் பத்தும் செய்யும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம். பணம் இல்லாமல் யாராலும் உயிர் வாழவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதற்காக அதிக அளவில் பாடுபடுகிறோம் என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பல வசியம் இருக்க வேண்டும். பண வசியம் இருந்தால் தான் நம்மிடம் பணம் தங்கும் அந்த வசியத்தை ஏற்படுத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பண வசிய பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடிய பொருள் வெந்தயம். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயம் வைத்திருக்கும் பாத்திரத்தில் பணத்தை சேர்த்து வைப்பார்கள் வெந்தயம் ஒருத்தன ஆகர்சன தானியமாக விளங்குகிறது. பஞ்சமி தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்தால் கர்மவினைகள் நீங்கி எதிர்மறை ஆற்றல் நீங்கி பணவரவு அதிகரிக்கும். பணம் தங்கு தடை இல்லாமல் வந்து சேரும் பண வசியம் உண்டாகும். பஞ்சமி அன்று இரவு 12 மணிக்குள் ஒரு சிறிய அகல் விளக்கில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து அதனுடன் ஒரு ரூபாய் நாணயம் ஒரே ஒரு விரலில் மஞ்சள் சேர்த்து வீட்டு பூஜை அறையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு வராகி அம்மனை முழுமனதோடு நினைத்து பண பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். தீபம் ஏற்றி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலைகள் தீபம் ஏற்றும் போது அகல் விளக்கில் இருக்கக்கூடிய விரலி மஞ்சளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைத்திருக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும் தெய்வ காரியங்களுக்காக மஞ்சள் மற்றும் அந்த பணத்தை உபயோகப்படுத்த வேண்டும். தண்ணீருடன் வெந்தயம் சேர்த்து அதனை மறத்தடியில் ஊற்றி விட வேண்டும் இப்படி செய்வதன் மூலம் வெந்தயம் அந்த மண்ணில் பட்டு முளைக்க ஆரம்பிக்கும் அது எறும்புக்களுக்கோ கால்நடைகளுக்கோ உணவாக இருக்கும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களும் கர்ம வினைகளும் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது அந்த அளவிற்கு இந்த பரிகாரமும் உங்களுக்கு நல்லதை கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் பணம் அதிகமாக சேர வாஸ்து பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full