Advertisement
சைவம்

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

Advertisement

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு என்னவென்றால், அதனை நேரடியாக நெருப்பில் சுடுவது தான். ஆனால், அந்த நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம். இப்போது அந்த நாணை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும்.

Advertisement

நம்முடைய வீட்டிலேயே நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே! நாண் போன்ற உணவு வகைகளை நாம் பெரும்பாலும் வீட்டில் செய்து பார்த்திருக்க மாட்டோம். எந்த வகை நாண் செய்ய வேண்டும் என்றாலும் தந்தூரி அடுப்பு முக்கியம். அதில் செய்யும் பொழுது நாணின் சுவை கூடுதலாக இருக்கும். தந்தூரி அடுப்பு இல்லையென்றால், தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கலாம். இதற்கு வெஜ் கிரேவி, சிக்கன் கிரேவி, மஷ்ரூம் கிரேவி என்று எதை வைத்தும் தொட்டு சாப்பிடலாம். சுவையாக இருக்கும் பன்னீர் நாண் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பன்னீர் நாண் | Paneer Nan Recipe In Tamil

Print Recipe
நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு என்னவென்றால், அதனை நேரடியாக நெருப்பில் சுடுவது தான். ஆனால், அந்த நாணை நாம் வீட்டில் செய்திருக்கமாட்டோம். இப்போது அந்த நாணை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். நிறைய பேருக்கு ஹோட்டலுக்கு சென்றால் நான் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலும் இதை யாரும் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால், நம்முடைய வீட்டிலேயே சுலபமாக இந்த நாண் ரெசிபியை செய்து பார்க்கலாமா? அது மட்டுமல்லாமல் கடைகளில் சென்று சாப்பிட்டால், இந்த நாண்க்கும், கிரரேவிக்கும் சேர்த்து, அதிகப்படியான பணம் செலவாகும். நம்முடைய வீட்டிலேயே நாண் தயார் செய்துவிட்டால், ஒரு வெஜிடபிள் குருமா வைத்துக்கூட, திருப்தியாக ஆசை தீர, இந்த நாணை சாப்பிட்டுக் கொள்ளலாமே!
Course dinner
Cuisine Indian
Keyword Paneer Nan
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 145

Equipment

  • 1 பவுள்
  • 1 தவா

Ingredients

  • 4 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் கருஞ்சீரகம்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

மாவு பிசைய :

  • 1 கப் மைதா மாவு
  • 1 டீஸ்பூன் பால் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்

ஸ்டப்பிங் செய்ய :

  • 1 கப் பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், பால் பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு, சர்க்கரை, நெய், தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் மாவின் மேல் சிறிதளவு நெய் தடவி ஒரு துணியால் மூடி ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிறிது நேரம் கழித்து மாவை இரண்டாக மடித்து அதன் மேல் நெய் தடவி ஊற வைத்து கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் பன்னீரை உதிர்த்து சேர்த்து அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், தனியா தூள், சீரக பொடி, கரம் மசாலா, ஆம்சூர் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் பன்னீர் கலவையை வெத்து மூடி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும். அதன் மேல் சிறிதளவு கருஞ்சீரகம், கஸ்தூரி மேத்தி வைத்து மீண்டும் ஒரு முறை தேய்த்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த மாவை சேர்த்து இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் நாண் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 145kcal | Carbohydrates: 3.5g | Protein: 10.9g | Fat: 1.5g | Sodium: 98mg | Potassium: 244mg | Fiber: 9.2g | Vitamin A: 78IU | Vitamin C: 93mg | Calcium: 20mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி, நாண் மற்றும் சாதத்துடன் சாப்பிட ருசியான பரோக்கோலி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

5 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

15 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

22 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

2 நாட்கள் ago