சப்பாத்தி, நாண் மற்றும் சாதத்துடன் சாப்பிட ருசியான பரோக்கோலி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த ப்ரக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும்.

-விளம்பரம்-

இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால்,உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும். இந்த ப்ரக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.‌ அந்த வகையில் இந்த ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான கிரேவி எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு தொட்டு கொள்ள அருமையாக இருக்கும் ப்ரோக்கோலி கிரேவி. இத்தனை மருத்துவ நன்மைகளை தரும் ப்ரக்கோலியை வைத்து சுவையான , ஆரோக்கியமான ப்ரக்கோலி கிரேவியை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.

- Advertisement -
Print
3 from 2 votes

புரோக்கோலி கிரேவி | Broccoli Gravy Recipe In Tamil

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த ப்ரக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதய நோய்கள் வருவதை தடுக்கும் அளவிற்கு நிறையவே சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது ப்ரோக்கோலி. இந்த பச்சை நிற காலிபிளவர் போன்று இருக்கும் ப்ரோக்கோலி அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல்நலம் வலுவாகும். இந்த ப்ரக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம்.‌ அந்த வகையில் இந்த ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான கிரேவி எப்படி வீட்டிலேயே தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Broccoli Gravy
Yield: 4 People
Calories: 62kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 புரோக்கோலி
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 10 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் புரோக்கோலியை கழுவி விட்டு நறுக்கி‌ வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  • இவை ஆறியதும் ஒரு‌ மிக்ஸியில் சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் மற்றொரு வாணலியை எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் ‌உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கிரேவி நன்கு கொதித்ததும் புரோக்கோலியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான புரோக்கோலி கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 62kcal | Carbohydrates: 6g | Protein: 4.1g | Fat: 1.6g | Sodium: 33mg | Potassium: 316mg | Vitamin A: 31IU | Vitamin C: 86.2mg | Calcium: 47mg | Iron: 4.73mg

இதனையும் படியுங்கள் ‌: ப்ராக்கோலி புலாவ் இப்படி மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்த உணவு பட்டியலில் இதுவும் ஒன்றாக சேரும்!