ப்ராக்கோலி புலாவ் இப்படி மட்டும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு பிடித்த உணவு பட்டியலில் இதுவும் ஒன்றாக சேரும்!

- Advertisement -

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்லவும் சிறந்த மதிய உணவாக திகழ்கின்றன.

-விளம்பரம்-

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. இவை பெரும்பாலும் சைவப் பிரியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது ரைத்தாவை வைத்தும், அசைவப் பிரியர்கள் முட்டை அல்லது சிக்கன் கறி வைத்து உண்கிறார்கள்.

- Advertisement -

இந்த பழமையான உணவு வகை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்ததாக ஒரு சாராரும், மற்றொரு சாரார் இவை பண்டைய கால இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல டர்க்கி, கிரிக் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர். நாம் இந்த பதிவில் சற்று ‌வித்தியாசமாக புரோக்கோலி புலாவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

புரோக்கோலி புலாவ் | Broccoli pulao Recipe In Tamil

புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. இவை பெரும்பாலும் சைவப் பிரியர்கள் பன்னீர் பட்டர் மசாலா அல்லது ரைத்தாவை வைத்தும், அசைவப் பிரியர்கள் முட்டை அல்லது சிக்கன் கறி வைத்து உண்கிறார்கள். இந்த பழமையான உணவு வகை முகலாய படையெடுப்பின் போது இந்தியாவுக்கு வந்ததாக ஒரு சாராரும், மற்றொரு சாரார் இவை பண்டைய கால இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல டர்க்கி, கிரிக் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறுகின்றனர்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: mumbai
Keyword: Broccoli pulao
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 1 மீடியும் சைஸ் ப்ரோக்கோலி
  • 1 குடைமிளகாய்
  • 12 பீன்ஸ்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 3 பச்சை மிளகாய்
  • 2 வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 கைப்பிடி பச்சை கொத்தமல்லி,
  • 1 கைப்பிடி புதினா
  • 4 ஸ்பூன் நெய்
  • 4 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 10 முந்திரி
  • 10 உலர்ந்த திராட்சை
  • உப்பு ருசிக்கேற்ப
  • 1 எலுமிச்சம் பழம்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுகி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, புதினாவை தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மீதி நெய்யில் பட்டை, சோம்பு, கிராம்பை வறுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கினதும், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • அதன் பிறகு கட் செய்து வைத்திருக்கும் புரோக்கோலி, பச்சை பட்டாணி, காப்ஸிகம் ஒவொன்றாக் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் எல்லாம் நன்றாக வந்தங்கிய பிறகு அரைத்த வைத்திருக்கும் மசாலா விழுது, மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை மணம் போக நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • அத்துடன் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி சேர்த்து மீதி இருக்கும் 2 ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி குறைந்த தீயில் 1 விசில் விட்டதும் அடுப்பை அணைத்து விட்டு, பிரஷர் போன பிறகு குக்கரை திறக்கவும்.
  • கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை தூவி, ஒரு எலுமிச்சம் பழம் பிழிந்து விட்டால் உதிரியான அருமையான மிக மிக சுவையான ப்ரோக்கோலி பச்சை புலாவ் தயார்

Nutrition

Serving: 1cup | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg