Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது இன்றைய காலகட்டத்தில் மட்டுமில்லாமல் அன்றைய காலகட்டத்தில் இருந்து ஒரு வழக்கமாக இருக்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள தீமைகள் அனைத்தும் அழிந்து நன்மைகள் மட்டுமே நிலைப்பதற்கு வீட்டில் சாம்பிராணி தூபம் போடலாம்.

-விளம்பரம்-

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டில் இருக்கும் தீமைகள் அழிந்து நன்மைகள் கிடைப்பதற்கு சாம்பிராணி தூபம் போடுவது எவ்வளவு நல்லது என்பதை பற்றி பார்க்கலாம்.

சாம்பிராணியின் வரலாறு

அனைவரும் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய இந்த சாம்பிராணி நறுமணம் கொண்ட மர பிசினில் இருந்து உருவாக்கப்படுகிறது. மேலும் சில ஆயுர்வேத மூலிகைகளையும் அதனை சேர்த்து தயார் செய்வதால் தெய்வீக மனம் நிறைந்து இந்த சாம்பிராணி நமக்கு கிடைக்கும். இந்த சாம்பிராணியை உடைத்தோம் அல்லது முழுவதுமாகவோ சூடான அடுப்பு கரியில் சேர்த்து அதனை நாம் நுகரும்போது அந்த வாசனை நமக்கு ஒரு நேர்மறையான எண்ணத்தை கொடுத்து புத்துணர்ச்சியையும் கொடுக்கும்.

சாம்பிராணி தூபம்

சாம்பிராணி தூபம் போடுவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் அந்த வகையில் சாம்பிராணி தூபம் வீட்டில் போடுவதால் கண் திருஷ்டி பொறாமை போன்றவை நீங்கி வாழ்க்கையில் முன்னேற முடியும். அகில் சேர்த்து சாம்பிராணியோடு தூபம் போடும்போது குழந்தை பேறு கிடைக்கும். மருதாணி விதைகளையும் சாம்பிராணியும் சேர்த்து தூபம் போட்டால் நம் மீது இருக்கும் பில்லி சூனியம் போன்றவைகள் விலகும். சந்தனத்தையும் சாம்பிராணிகளையும் சேர்த்து தூபம் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். சாம்பிராணியோடு அருகம்புல் பொடியை சேர்த்து தூபம் போட நமக்கு இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி நன்மைகள் உண்டாகும். சாம்பிராணியோடு வெட்டிவேரை சேர்த்து தூபம் போட்டால் காரிய தடைகள் நீங்கி சுப காரியங்கள் நடக்கும்.

சாம்பிராணியோடு வெண்கடுகை சேர்த்தது உபம் போட்டால் நம் மீது மற்றவருக்கு இருக்கும் பகை விலகும். சாம்பிராணியும் வேப்பிலையையும் சேர்த்து தூபம் போட்டால் நமக்கு இருக்க கூடிய அனைத்து நோய்களிலிருந்தும் விடுபடலாம். வெண் குங்கிலியை சாம்பிராணியுடன் சேர்த்து போட்டு தூபம் போட்டால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலகும். சாம்பிராணியும் ஜவ்வாதியையும் சேர்த்து தூபம் போட்டால் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். சாம்பிராணியும் வேப்பம்பட்டையையும் சேர்த்து தூபம் போட்டாலும் பில்லி சூனியம் ஏவல் போன்றவை விலகும். சாம்பிராணியோடு நாய் கடுகை போட்டு தூபம் இட்டால் நம் உடலில் இருக்கும் துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள். சாம்பிராணியோடு கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து தூபம் போட்டால் மகான்களுடைய ஆசையும் நம் முன்னோர்களுடைய ஆசியும் கிடைக்கும். சாம்பிராணியோடு நன்னாரி வேரின் பொடியை சேர்த்து தூபம் போட்டால் நம் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். மருதாணி இலை பொடியையும் சாம்பிராணியையும் சேர்த்து தூபமிட்டால் வீட்டில் மகாலட்சுமி வாசம் இருக்கும். உங்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாம்பிராணியோடு சேர்த்து ஒரு பொருளை போட்டு தூபம் போட்டால் உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பீரோவில் இந்த பொருள் இருந்தால் வீட்டில் பணம் நிலைக்கவே நிலைக்காது என்பது தெரியுமா?