வீட்டிலயே சுலபமாக ருசியான பன்னீர் பீட்சா இப்படி செய்து அசத்துங்கள்! ஆஹா இதன் ருசியே ருசி தனி ருசி தான்!
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. பீட்சா மிகவும் சுவையான இளைஞர்கள், குழந்தைகள், அனைவரு
உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. பீட்சா மிகவும் சுவையான இளைஞர்கள், குழந்தைகள், அனைவருக்கும் பிடித்த உணவு வகை. இது இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இது தவிர உலகம் முழுவதும் பீசா அனைவருக்கும் விருப்பமான உணவு வகை. இன்றைய தலைமுறையினர்களுக்கு பீட்சா என்றால் அதீத பிரியம் உண்டு. சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் பீட்சாவை சாப்பிடாத இளைஞர்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் பீட்சாவை கடையில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல. எனவே வீட்டிலேயே எப்படி சுவையான பீட்சாவை தயார் செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம். பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். பீட்சாவில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளது, பீட்சா மாவு, பீசா சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் இவை அனைத்தையுமே நம் வீட்டிலேயே செய்யலாம். மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பிட்சாவை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால் அந்த பிட்சாவை வீட்டில் செய்து கொடுங்கள். பிட்சா செய்வது மிகவும் சுலபம். அதுவும் அதை வீட்டிலேயே செய்தால், அது ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் வீட்டில் பிட்சா செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், பன்னீர் பிட்சா செய்து கொடுங்கள்.
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!