உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது. பின்பு பொருளாதார முன்னேற்றம், நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பின்பு, பீட்சா உலக உணவாக அவதாரம் எடுத்தது. பீட்சா மிகவும் சுவையான இளைஞர்கள், குழந்தைகள், அனைவருக்கும் பிடித்த உணவு வகை. இது இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இது தவிர உலகம் முழுவதும் பீசா அனைவருக்கும் விருப்பமான உணவு வகை. இன்றைய தலைமுறையினர்களுக்கு பீட்சா என்றால் அதீத பிரியம் உண்டு. சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் பீட்சாவை சாப்பிடாத இளைஞர்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் பீட்சாவை கடையில் வாங்கி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல. எனவே வீட்டிலேயே எப்படி சுவையான பீட்சாவை தயார் செய்து சாப்பிடலாம் என்று பார்ப்போம். பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். பீட்சாவில் மூன்று முக்கியமான அம்சங்கள் உள்ளது, பீட்சா மாவு, பீசா சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் இவை அனைத்தையுமே நம் வீட்டிலேயே செய்யலாம். மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பிட்சாவை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால் அந்த பிட்சாவை வீட்டில் செய்து கொடுங்கள். பிட்சா செய்வது மிகவும் சுலபம். அதுவும் அதை வீட்டிலேயே செய்தால், அது ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் வீட்டில் பிட்சா செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், பன்னீர் பிட்சா செய்து கொடுங்கள்.
பன்னீர் பீட்சா | Paneer Pizza Recipe In Tamil
Equipment
- 2 பவுள்
- 1 பெரிய தட்டு
- 1 ஓவன்
தேவையான பொருட்கள்
- 1 கப் மைதா மாவு
- 1 கப் கோதுமை மாவு
- 2 டீஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் உப்பு
- 2 டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்
- 1 கப் பன்னீர்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கருப்பு உப்பு
- 4 டீஸ்பூன் வெண்ணெய்
- 2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மாங்காய் பொடி
- 1 டேபிள் ஸ்பூன் தயிர்
- 2 டீஸ்பூன் துருவிய பூண்டு
- 1 குடைமிளகாய்
- 2 பெரிய வெங்காயம்
- 2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
- இத்தாலியன் சீசனிங் தேவையான அளவு
- பீட்சா சாஸ் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பவுளில் ஈஸ்ட், சூடான தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
- பின் பவுளில் மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, கலந்து வைத்துள்ள ஈஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு பிசையவும். பிசைந்த மாவை வைத்த மாவை 2 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
- மற்றொரு பவுளில் சிறிய துண்டங்களாக நறுக்கிய பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனுடன் வெண்ணெய், காஷ்மீர் மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, கருப்பு உப்பு, தயிர், துருவிய பூண்டு, சில்லி ஃப்ளெக்ஸ், இட்டாலியன் சீசனிங், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதன்பிறகு பீட்சா மாவை ஒருமுறை பிசைந்து பேக்கிங் தட்டில் எண்ணெய் தடவி அதில் தயாராக வைத்துள்ள மாவை வைத்து ஒரு கரண்டியால் குத்தி சிறு சிறு துளைகள் இடவும்.
- பின் பீசா சாஸ் தேவையான அளவு தடவி இதன் மேல் பன்னீர் கலவையை சேர்த்து பிறகு வெங்காயம், குடமிளகாய், சில்லி பிளெக்ஸ், இட்டாலியன் சீசனிங், மொஸரெல்லா சீஸ் சேர்க்கவும்.
- பின் 10 நிமிடம் oven’னை 180°C அளவில் சூடாக்கி பீட்சாவை உள்ளே வைத்து நீங்கள் 10-12 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பன்னீர் பீட்சா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான பீட்சா சாண்ட்விச் இப்படி ஒரு முறை வீட்டில் ட்ரை பன்னி பாருங்க!