ருசியான பன்னீர் புலாவ் இனி இப்படி செஞ்சி பாருங்கள்! சுட சுட புலாவ் இப்படி செய்து கொடுத்தால் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போ பன்னீர் புலாவை முயற்சி செய்து பாருங்கள். விதவிதமான புலாவ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண
தினம் சாதம், சாம்பார், பொரியல் என சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போ பன்னீர் புலாவை முயற்சி செய்து பாருங்கள். விதவிதமான புலாவ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. புலாவ்களில் பல வகை உண்டு, அதில் நாம் இங்கு காண இருப்பது பன்னீர் புலாவ். பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும். பொதுவாக பன்னீர் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு. இன்னும் சொல்ல போனால் பன்னீர்க்கு என்று ஒரு தனி கூட்டமே உண்டு. அந்த வகையில் புலாவ்வும் உணவுப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு வகை. அதனாலேயே பன்னீர் புலாவ்வுக்கு உணவு பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது.
இதை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருட்கள் மற்றும் செய்முறையை பின்பற்றி செய்கிறார்கள். அதற்கேற்றவாரே வெவ்வேறு நாடுகளில் இவை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. பன்னீர் புலாவ்யின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை செய்வதற்கு அதிக நேரம் பிடிக்காது. சமைக்க ஆரம்பிப்பவர்கள் கூட இதை மிக எளிதாக செய்துவிட முடியும். மேலும் பன்னீர் உடம்பிற்கு மிகவும் நல்லது என்பதினாலும் மற்றும் இதில் பல காய்கறிகளை நாம் சேர்ப்பதினாலும் இதை நாம் குழந்தைகளுக்கு எந்த பயமுமின்றி செய்து கொடுக்கலாம். இவை குழந்தைகளுக்கு மதிய உணவாக ஸ்கூலுக்கு மற்றும் அலுவலகங்களுக்கு கொண்டு செல்ல ஒரு அசத்தலான மதிய உணவு.
இதனையும் படியுங்கள் : ருசியான மொறு மொறு பன்னீர் 65 இப்படி வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஒரு தரம் செய்து பாருங்க அட்டகாசமான ருசியில் இருக்கும்!