- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- snacks
பன்னீர் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு..என்ன தா நம்ம பன்னீர் கிரேவி, பன்னீர் பிரியாணி, பன்னீர் புலாவ் செய்து எல்லாத்தையும் விரும்பி சாப்பிட்டாலும் பன்னீர் 65 டேஸ்ட் அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த அளவுக்கு பன்னீர் 65 டேஸ்ட் சூப்பரா இருக்கும்.. காரசாரமா மொறு மொறுன்னு சிவப்பு கலர்ல அந்த பன்னீர் 65 பாக்கும்போது எல்லாருக்கும் நாக்குல எச்சில் ஊறும்.
மோர் குழம்பு, சாம்பார், வெஜ் பிரியாணி, ரசம் , தயிர் சாதம்னு எல்லா உணவுகள் கூடவே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் அதிகமாகவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு பன்னீர் 65 ருசியை சொல்லலாம். பன்னீர் சுவையானது மட்டுமே கிடையாது ரொம்ப ஆரோக்கியமானது கூட.
இது பாலில் தயாரிக்கப்படுகிற ஒரு பொருள் அதை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு அவ்வளவு நன்மையை கொடுக்கக்கூடியது. இந்த எப்பவுமே பன்னீர் புலாவ், பன்னீர் ப்ரைடு ரைஸ் இல்ல ஏதோ ஒரு கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா இப்படி தான் நம்ம செய்திருப்போம்.
ஆனால் இந்த மாதிரி பன்னீர் 65 கடைகளில் வாங்கி சாப்பிடும்போது ரொம்பவே சுவையா இருக்கும். நம்ம வீட்ல செய்தால் எல்லாம் பன்னீர் 65 மசாலாக்கள் உதர்ந்து போயிடும் . ஆனால் வீட்ல பன்னீர் 65 செய்யும்போது மசாலா எல்லாம் உதிர்ந்து போகாமல் வீட்டிலேயே ஒரு சூப்பர் அருமையான பன்னீர் 65 எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் பன்னீரை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின் அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், மல்லிதூள், சீரகத்தூள், கரமசாலா மிளகு தூள் எனஅனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் சோளமாவை சேர்த்துக்கொள்ளவும்.இப்பொழுது அதில் பன்னீரை கால் மணி நேரம் வரையில் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பன்னீர் நன்றாக ஊறிய பிறகு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் பன்னீரை போட்டு பன்னீர்பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் தாளித்து அதை பொரித்த பன்னீரில் சேர்த்தால் வாசமாக இருக்கும்.. சூடாக பரிமாறினால் சுவையான பன்னீர் 65 தயார்.






