Advertisement
சைவம்

பனீர் புலாவ் செய்வது எப்படி!

Advertisement

பனீர் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மத்திய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை வீட்டிலே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.

பனீர் புலாவ் | Paneer Pulao Recipe In Tamil

Print Recipe
பனீர் புலாவ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மத்திய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை வீட்டிலே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword paneer pulao, பனீர் புலாவ்
Prep Time 5 minutes
Cook Time 14 minutes
Total Time 21 minutes
Servings 4 people
Calories 32

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 கப் பனீர்த் துண்டுகள்
  • 1 வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 2 துண்டுகள் பட்டை
  • 3 பச்சைமிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

செய்முறை:

  • முதலில் அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக அறிந்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பட்டை, போட்டு பொரிக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்,சேர்த்து லேசாக வதக்கவும்.
  • தண்ணீர் வடித்த அரிசியை இதனுடன் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து உதிரி பதத்தில் வேக விடவும்.
  • அடுத்து பனீர்த் துண்டுகளை லேசாக நெய்யில் பொரித்து நெய்யுடன் சாதத்தில் கொட்டி கலக்கவும்.
  • நெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள், பனீர்த் துண்டுகளை பொடியாக்கி சூடான சாதத்த்தில் கலந்து கொத்தமல்லி தூவி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
  • பச்சடியுடன் சேர்த்து பரிமாறலாம்.

Nutrition

Calories: 32kcal | Carbohydrates: 142g | Cholesterol: 276mg
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

3 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

21 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago