பங்குனி மாத ராசி பலன் 2025!!

மேஷம் மேஷ ராசிக்கு பங்குனி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்

By ·

மேஷம்

மேஷ ராசிக்கு பங்குனி மாதத்தில் விரய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் காரணமாக நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உங்களின் செயல் திறன் அதிகரிக்கும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும்.சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை சரியாக செய்வதோடு, சில மோசமான விஷயங்களைப் புறக்கணிப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு பங்குனி மாதத்தில், உங்களின் சிறப்பான முயற்சிகளால் வேலை, தொழில் மற்றும் கல்வி தொடர்பான விஷயத்தில் எதிர்பார்த்த நன்மைகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்த மாதம் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பேச்சு, செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வணிகம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பயணம் நல்ல பலன் தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு பங்குனி மாதத்தில் சுபமான பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக அதிக லாபத்தை ஈர்க்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் தந்தையுடன் உறவு மோசம் அடைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். நீண்ட காலமாக உங்கள் காதலை ஒருவரிடம் வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்கு பங்குனி மாதத்தில் உங்கள் ஆற்றல் மற்றும் நேரத்தை சரியான வழக்கு திட்டமிட்டு செயல்படவும். அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் தேவையற்ற பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த மாதத்தில் தைரியத்துடன் செயல்பட்டால் ஏமாற்றம் நீங்கும். இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய மாதம். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கும். மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்கியம் மேன்மை அடையும்.

கன்னி

கன்னி ராசிக்கு இந்த பங்குனி மாதத்தில் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். அதன் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகாமாக இருக்கும். ஆனால் மாத தொடக்கத்தில், அன்புக்குரியவருடன் தவறான புரிதல் அல்லது தகராறு காரணமாக வருத்தப்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். புதிய வேலையை தொடங்க அதில் வெற்றிகள் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு நோய் எதிர் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் நடப்பதால் உங்களின் ஆரோக்கியம் மேம்படும். இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். உங்களின் பொறுப்பற்ற செயல்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாகவும் இருங்கள். உடல்நலனில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன் – மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளில் நிறைய நன்மை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. உங்கள் வேலை, தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தனுசு

தனுசு ராசி பிறந்தவர்களுக்கு உங்கள் வேலையில் கடினமான உழைப்பு தேவைப்படும். நிதிநிலை மேம்படும். இந்த பங்குனி மாதத்தில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் மறைமுக எதிரிகளிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

மகரம்

மகர ராசிக்கு இந்த பங்குனி மாதத்தில் எந்த வேலை செய்தாலும், அதில் மும்பை விட சிறப்பான நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் அன்றாட வேலைகளை சரியாக திட்டமிட்டு ஒழுக்கமாக செய்தாலே முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்து சேர்வார்கள். இந்த நேரத்தில், பணியிடத்தில் மூத்தவர்கள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பங்குனி மாதம் வாழ்க்கையில் ஸ்திரத் தன்மையை அதிகரிக்கும். மாத தொடக்கத்தில் ஆடம்பரப் பொருளை வாங்குவது வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும். நீங்கள் முன்னர் செய்த கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில் புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும். மாதத்தின் இரண்டாம் பாதியில், தொழில் அல்லது வணிகம் தொடர்பான பயணங்கள் சோர்வு நிறைந்ததாக இருக்கலாம்.

மீனம்

மீன ராசிக்கு இந்த பங்குனி மாதத்தில் அனைத்து துறைகளிலும் நற்பெயரையும், மரியாதையும் அதிகரிக்கும். சில காரணங்களால் மன அமைதியின்மை ஏற்படும். இந்த நேரத்தில், உங்கள் திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிக்க முடியும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மாதத்தின் இரண்டாம் பாதியில் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.

இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full