சொந்த வீடு கட்ட செய்ய வேண்டிய பரிகாரம்!!

வாழ்க்கையில் பெரும்பாலானோர் நினைப்பது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதைத்தான். வாடகை வீட்டில் வசதியாக வாழ்ந்தால் கூட நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள் அதனை நினைவாக்கத்தான் அனைவரும் அரும்பாடு படுகிறார்கள். சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்க கூடிய அற்புதமான எளி

By Prem Kumar · 1/8/2025

வாழ்க்கையில் பெரும்பாலானோர் நினைப்பது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதைத்தான். வாடகை வீட்டில் வசதியாக வாழ்ந்தால் கூட நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள் அதனை நினைவாக்கத்தான் அனைவரும் அரும்பாடு படுகிறார்கள். சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்க கூடிய அற்புதமான எளிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

கிரகப்பிரவேசம்

கிரகப்பிரவேசம் என்பது புதிய வீட்டுக்குள் கால் பதிக்கும் போது செய்யும் ஒரு புனிதமான விஷயம். அங்கு கணபதி ஹோமம் வளர்த்து கணபதியின் அருளை வேண்டி அக்னி வளர்க்கப்படும். அந்த ஹோம குண்டத்தை செங்கல்களை அடுக்கி தான் உருவாக்குவார்கள். அந்த கற்கள் தெய்வீகமான அக்னியின் சக்தியையும் ஹோமத்தின் புனிதத்தையும் உள்வாங்கிக் கொள்ளும். அந்த செங்கல்களில் இருந்து ஒரு கல்லை மட்டும் எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் அது வீடு கட்ட பெரிதும் உதவும். அதனைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஹோம செங்கல்

அது வெறும் செங்கல் கிடையாது விநாயகருடைய அருளையும் புது வீட்டிற்குள் நுழையும் போது வெளிப்படும் நேர்மறை ஆற்றலையும் உள்வாங்கிக் கொண்ட ஒரு சக்தி என்றே கூறலாம். அந்தக் கல்லை நம் வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்வதன் மூலம் நம்முடைய எண்ணங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அந்த செங்கலை பார்க்கும்போது எல்லாம் “நான் வீடு கட்ட போகிறேன் விநாயகர் துணை இருக்கிறார்” என்ற வாசகத்தை ஆழ்மனதில் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அது நிச்சயமாக வீடு கட்ட உதவியாக இருக்கும். கடின உழைப்போடு சேர்த்து இதனை செய்தால் நிச்சயமாக நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

விரைவில் வீடு கட்டலாம்

நம்பிக்கையோடு ஒரு செங்கலை நாம் பார்த்து “என்னால் முடியும் என் கனவு நிஜமாகும்” என்று மனதார கூறிக் கொண்டே இருந்தால் நிச்சயமாக நீங்கள் நினைத்தது நிறைவேறும். கிரகப்பிரவேசம் நடக்கும் போது கணபதி ஹோமம் நடக்கும் இடத்தில் இருந்து ஒரு செங்கலை எடுத்து வந்து வீட்டில் பூஜை செய்வதால் விரைவில் சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும் என்பது பாரம்பரியமான ஒரு நம்பிக்கை. இதனை மூடநம்பிக்கையாக நினைக்காமல் நிச்சயமாக செய்து பாருங்கள் உங்களுக்கு விரைவில் நேர்மறையான பல விஷயங்கள் நடக்கும். அந்தக் செங்கலை எடுத்து வந்து சந்தன குங்குமம் பொட்டு வைத்து விநாயகரை நினைத்து வழிபட்டு வந்தால் விரைவில் வீடு கட்டி குடியேறலாம்.

இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க குலதெய்வ வழிபாடு

Recipes AMP · Quick view
View full