நிரந்தர பண வரவை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக கடினமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் அதனால் அனைவருக்கும் பணத்தின் உடைய மதிப்பு நன்றாகவே தெரியும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் கூட பணம் கையில் வந்தாலும் தங்காமல் போகும் பணம் வீண் விரையம் ஆகும் இதற்கு ஜோதிட ரீதிய

By Prem Kumar · 28/7/2025

அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக கடினமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் அதனால் அனைவருக்கும் பணத்தின் உடைய மதிப்பு நன்றாகவே தெரியும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் கூட பணம் கையில் வந்தாலும் தங்காமல் போகும் பணம் வீண் விரையம் ஆகும் இதற்கு ஜோதிட ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது அதில் முக்கியமானது மகாலட்சுமி தேவியின் அருள் இல்லாததுதான் எனவே பண வரவை தக்கவைத்து அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்

பரிகாரத்திற்கு தேவையான பொருள்

இந்த ஒரு எளிமையான பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது ஒரு மலர் தான்.மலர்களை வைத்து தெய்வத்தை வழிபட்டால்தான் ஒரு மன நிறைவு கிடைக்கும் அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்த போகும் மலர் செம்பருத்தி அனைத்து தெய்வங்களுக்கும் இந்த செம்பருத்தி கையை வைத்து வழிபடலாம் அப்படிப்பட்ட செம்பருத்தி பூவை வைத்த இந்த பரிகாரத்தை செய்யும் முறையை பற்றி பார்க்கலாம்

செம்பருத்தி பூ

இந்த செம்பருத்தி பூவில் பல தெய்வீக சக்திகள் இருக்கிறது மருத்துவ குணங்களும் அதிகமாக நிறைந்த இந்த செம்பருத்திப்பூ இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுகிறது. நல்ல பிரெஷான ஐந்து இதழ்கள் கொண்ட ஒரு சிவப்பு நிற செம்பருத்தி மலரை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம்

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்திற்கு நமக்கு அடுத்ததாக தேவைப்படுவது செம்பு உலோகத்தில் ஆன ஒரு சொம்பு. அது சிறியதாக இருந்தாலும் கூட பரவாயில்லை அதனை வைத்து செய்யலாம் ஆனால் செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட சொம்புதான் இதற்கு தேவை. இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை இரவு தூங்க செல்வதற்கு முன்பாக தான் செய்ய வேண்டும் மாலை நேரத்திலேயே மொட்டாக இருக்கக்கூடிய ஒரு செம்பருத்தி பூவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும் இரவு படுக்க செல்வதற்கு முன்பாக பூஜை அறையில் சொம்பை தண்ணீரை நிரப்பி அது செம்பருத்தி பூவை போட வேண்டும். மறுநாள் காலையில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கான பரிகாரம்

காலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள ஏதாவது ஒரு தெய்வத்திற்கு குறிப்பாக மகாலட்சுமி தேவியார் அல்லது குலதெய்வத்திற்கு செம்பருத்தி பூவை எடுத்து வைக்க வேண்டும் சுண்டல் இருக்கக்கூடிய தண்ணீரை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் தீர்த்தமாக நினைத்து குடிக்க வேண்டும் இதே போல் தொடர்ந்து 48 நாட்கள் இந்த செம்பருத்தி பூ பரிகாரத்தை செய்து வந்தால் மகாலட்சுமி தயார் உடைய முழு அருளையும் பெற்று பணவரவை நிரந்தரமாக அதிகரிக்க முடியும் எதிர்பாராத விதமாக பண வரவும் கிடைக்கும். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் அதற்கான பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : பணம் அதிகமாக சேருவதற்கு செய்ய வேண்டிய நாணய பரிகாரம்

Recipes AMP · Quick view
View full