கண் திருஷ்டி காணாமல் போக செய்ய வேண்டிய பரிகாரம்!

பொதுவாக வீடுகளிலும் தொழில் செய்யும் இடத்திலும் ஒரு கண்ணாடி டம்ளர் போல் நீரூற்றி அதில் எலுமிச்சம் பழத்தை வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று நாம் நிறைய முறை யோசித்து இருப்போம் ஆனால் ஆன்மீக ரீதியாக எலுமிச்சம் பழத்திற்கு நிறைய குணங்கள் உள்ளது இது நல்ல

By ·

பொதுவாக வீடுகளிலும் தொழில் செய்யும் இடத்திலும் ஒரு கண்ணாடி டம்ளர் போல் நீரூற்றி அதில் எலுமிச்சம் பழத்தை வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று நாம் நிறைய முறை யோசித்து இருப்போம் ஆனால் ஆன்மீக ரீதியாக எலுமிச்சம் பழத்திற்கு நிறைய குணங்கள் உள்ளது இது நல்ல சக்தியை அதிகரிக்கவும் தீய சக்தியை குறைக்கவும் மிகவும் பயன்படுகிறது.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழத்திற்கு தேவ கனி ஆன்மீக கனி என்ற பல பெயர்கள் உள்ளது தெய்வங்களுக்கு உகந்த ஒரு கனி என்றால் அது எலுமிச்சை பழம் தான். மேலும் எலுமிச்சை பழத்திற்கு உயிரும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எலுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி அதிகமாகவே உள்ளது எலுமிச்சை பழத்தை தண்ணீரில் போட்டு வைப்பதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

எலுமிச்சை பழத்தை தண்ணீரில் போடுவதால் ஏற்படும் பலன்கள்

எலுமிச்சை பழத்தில் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் எலுமிச்சை பழத்தை தண்ணீரில் கலந்து எடுப்பது எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது.

ஆன்மீக ரீதியாக எலுமிச்சை பழத்திற்கு நேர்மறையான ஆற்றல் உண்டு. ஒருவர் தீய எண்ணங்களுடன் நம்மை நெருங்கினாலும் இந்த எலுமிச்சை பழம் நம்மை அவர்களிடமிருந்து பாதுகாக்கும்.

மேலும் எலுமிச்சை பழம் போட்டு வைத்துள்ள தண்ணீருக்கு தெய்வ சக்தியும் ஞாபக சக்தியும் அதிகமாகவே உள்ளது. கடவுளின் பெயரை கூறி ஹோமம் செய்யும் போது எலுமிச்சை பழம் கலந்து தண்ணீர் கலச தீர்த்தமாக மாறும் அர்ச்சனை செய்யும் போதும் இந்த தண்ணீர் தீர்த்தமாகவும் மாறும்.

இந்த எலுமிச்சை பழத்தை நாம் எதிர்மறை ஆற்றலை குறைப்பதற்கு பயன்படுத்தலாம். எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவதால் நேர்மறை ஆற்றலை நம் பக்கம் இருக்கலாம்.

வீடுகள் வேலை பார்க்கும் இடம் தொழில் செய்யும் இடம் அனைத்திலும் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை பழத்தை போட்டு வைப்பதால் தீய அதிர்வுகள் நீங்கி நல்ல சக்திகள் அந்த இடத்தில் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : பணம் செலவு செய்ய செய்ய திரும்ப உங்களிடம் வர வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Recipes AMP · Quick view
View full