வீட்டு செல்வம் பெருக நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்னால் வைக்க வேண்டிய ஒரு பொருள்

வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வ கடாட்சமும் இருந்தால் தான் நம் வீட்டிற்கு கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் நிம்மதியான வாழ்க்கை என அனைத்துமே கிடைக்கும். வீட்டில் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் வீட்டில் வருமானம் இல்லை என்றால் வீட்டில்

By Ramya · 20/8/2024

வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வ கடாட்சமும் இருந்தால் தான் நம் வீட்டிற்கு கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் நிம்மதியான வாழ்க்கை என அனைத்துமே கிடைக்கும். வீட்டில் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் வீட்டில் வருமானம் இல்லை என்றால் வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். இருக்கு செல்வமும் ஐஸ்வர்யம் வர வேண்டும் என்றால் அது நிலை வாசல் வழியாகத்தான் வரும். அந்த ஐஸ்வர்யா கடாட்சத்தை வீட்டிற்குள் நாம் அழைத்து வருவதற்கு ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்தால் போதும் அந்த தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்

தேன் மெழுகு

இந்த பரிகாரத்திற்காக நாம் வாங்க வேண்டிய பொருள் என்னவென்றால் தேன் மெழுகு தான் இந்த தேன் மெழுகு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த தேன்மழகை வாங்கி நாம் எங்காவது ஒட்டி வைத்தால் அப்படியே ஒட்டிக் கொள்ளும் தானாக ஒட்டிக் கொள்ளும் சக்தி உள்ளது ஒருவேளை அந்த குறிப்பிட்ட தேன்மெழுகு ஒட்டவில்லை என்றால் லேசாக அதனை சூடு செய்து நாம் ஒட்ட வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் கீழே விழவே விழாது.

செல்வ வளம் பெருக தேன் மெழுகு பரிகாரம்

உங்களுக்கு எவ்வளவு தேன் மெழுகு வேண்டுமோ அவ்வளவு வாங்கிக் கொள்ளுங்கள் பிறகு சுத்தமான தாழம்பூ குங்குமம் ஜவ்வாது போன்றவற்றை வியாழக்கிழமை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நிலை வாசலை துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூக்கள் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நிலை வாசலில் மேல் பக்கம் நிலை வாசல் மரத்தில் சிறிதளவு தேன்மொழியை எடுத்து ஒட்டி வைத்து அதன் மீது ஜவ்வாது பூசி அதன் மேல் குங்குமத்தை வைக்க வேண்டும் மனதார குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வீட்டில் ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

வருமானத்தை கொடுக்கும் பரிகாரம்

இந்த தேன்மழகை ஒரு மாதத்திற்கு அப்படியே விட்டுவிட வேண்டும் ஒரு மாதம் முடிந்த பிறகு பழைய தேன்மழுகை எடுத்துவிட்டு புதியதாக தேன் மெழுகை ஒட்டி மறுபடியும் அதே போல் ஜவ்வாது குங்குமம் வைக்க வேண்டும். இந்த தேன் மெழுகு இனிப்பான வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்கும் கஷ்டங்களை எல்லாம் போக்கி வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் ஐஸ்வர்யா கடாட்சத்தையும் கொடுக்கும் வருமானம் தானாக உங்களுக்கு வர தொடங்கும்.

வெள்ளிக்கிழமை அன்று நிலை வாசலில் தேன் மெழுகை வைத்த இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை அனைத்தும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் பூஜை செய்யும்போது தேன் மெழுகுக்கு ஊதுபத்தி மட்டும் காட்டி மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நான்கு வாரங்கள் அதற்கு பூஜை செய்த பிறகு ஐந்தாவது வாரம் அதனை கண்டிப்பாக மாற்ற வேண்டும் ஏனென்றால் அதனுடைய சக்தி நான்கு வாரத்திற்கு பிறகு குறைந்து விடும்.

பரிகாரம் செய்ய வேண்டிய கால அளவு

இந்த சிறிய எளிய பரிகாரத்தை வீட்டில் முழு மனதோடு செய்து வந்தால் தீராத கஷ்டங்களும் தீர்ந்து வருமானம் வீட்டில் அதிகரிக்கும். இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை மூன்று மாதங்களுக்கு வீட்டில் செய்து வர நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்கும். சித்தர்களால் கூறப்பட்ட இந்த எளிமையான பரிகாரத்தை நம்பிக்கையோடு முழு மனதோடு ஒரு மனதோடு செய்து பாருங்கள் நிச்சியமாக நல்ல பலனே கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full