Advertisement
சைவம்

ஹோட்டல் சுவையில் பருப்பு இப்படி செய்து பாருங்க!

Advertisement

ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அரைத்து கொடுத்து விடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த பருப்பு பொடியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். ஒரு முறை அரைத்தால் போதும் 2 மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

Advertisement

இந்த பருப்பு பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் அரைத்து ருசித்திடுகள்.

பருப்பு பொடி | Paruppu Podi Recipe In Tamil

Print Recipe
ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அரைத்து கொடுத்து விடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த பருப்பு பொடியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். ஒரு முறை அரைத்தால் போதும் 2 மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.
இந்த பருப்பு பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் அரைத்து ருசித்திடுகள்.
Advertisement
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword paruppu podi, பருப்பு பொடி
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 16 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் கடலை பருப்பு
  • ½ கப் பாசிப்பருப்பு
  • ¼ கப் உளுத்தப்பருப்பு
  • ½ கப் பொட்டுக்கடலை
  • ½ ஸ்பூன் சீரகம்
  • 10 to 15 காய்ந்த மிளகாய்
  • கருவேப்பிலை ஒரு கொத்து
  • ¼ ஸ்பூன் நெய்
  • 10 பல் பூண்டு நசுக்கியது
  • ¼ ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் பெருங்காயப்பொடி

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துமிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் துவரம் பருப்பை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் தனியாக எடுத்துவைக்கவும்.
  • அடுத்து அதே கடாயில் கடலை பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வருது தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்து பாசிப்பருப்பையும் சிவக்க வருது தனியாக எடுத்துவைக்கவும்.
  • அடுத்து உளுத்தம் பருப்பு சேர்த்து அதே போல் நன்கு வறுத்து நிறம் மாறியதும் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
  • அடுத்து பொட்டுக்கடலை சேர்த்து கொஞ்சம் வறுத்து அதனையும் தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே போல் வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு கறிவேப்பிலை சேர்த்து நொறுங்கும் பதத்திற்கு நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதே கடாயில் நெய் விட்டு பூண்டு சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • கடைசியாக உப்பு, பெருங்காய பொடி சேர்த்து லைட்டாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது வறுத்த பொருட்களையும் நன்கு ஆற விட்டு மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ருசியான பருப்பு பொடி தயார்.
Advertisement
swetha

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

3 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

5 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

7 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

14 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

15 மணி நேரங்கள் ago