பசு மாட்டிற்கு இந்த 1 பொருளை தானம் கொடுத்தால் லட்சக்கான கடனும் தீரும்!

கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான் சீட்டு போட்டு கடனை அடைக்க நாம் முயன்றாலும் நம்மால் முடிவதில்லை. வாங்கிய ஒர

By Prem Kumar · 21/7/2023

கடன் இல்லாத வாழ்வை தான் நம்மில் பலரும் வாழ விரும்புகிறோம். ஆனால் நாம் அந்த கடனை விட்டாலும், கடன் நம்மை விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் எப்படியோ நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். என்னதான் சீட்டு போட்டு கடனை அடைக்க நாம் முயன்றாலும் நம்மால் முடிவதில்லை. வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனுக்காக வட்டி மட்டுமே நாம் ஒரு லட்ச ரூபாய் கட்டுவோம் ஆனால் அசல் தொகையை நம்மால் திருப்பி தர இயலாது. அதற்கு தான் ஆன்மீகத்தில் ஒரு பரிகாரத்தை சொல்லி இருக்கிறார்கள். அது என்ன என்பது பற்றியும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

கடன் தீர பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டிய தானம்

பொதுவாக நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு பகுதியை தானமாக வழங்க வேண்டும். ஆசிரமத்திற்கு உணவாகவும் அல்லது இல்லாதவர்களுக்கு யாசகமாகவோ வழங்க வேண்டும். ஆனால் இவற்றை பணமாக வழங்க கூடாது ஒரு பொருளாக தான் வழங்க வேண்டும். இப்படி செய்கையில் நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.

இந்த வயிற்றை நிரப்புவதற்கு தானே நாம் அவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறோம். நம்மால் ஒரு நேரம் பசியை கூட தாங்க முடியாது அது போலத்தான் மற்றவர்களும், எனவே ஒரு நேர உணவு கூட இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் உணவு வாங்கி கொடுத்தால் அந்த புண்ணியமானது நம் தலைமுறையை காக்கும் தன்மை வாய்ந்தது.

எள் மற்றும் புண்ணாக்கு

இந்து சாஸ்திரங்களில் பசுமாடு மிகவும் முக்கியமானது பசுமாட்டில் தான் 30 கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். மகாலட்சுமி தாயாருக்கு இணையாக தான் நாம் பசுமாட்டை கருதுகிறோம். அப்படி இருக்கையில் பசுமாட்டை கண்டவுடன் நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதன் அடிப்படையில் நாம் பசு மாட்டிற்கு எள் மற்றும் புண்ணாக்கை தானமாக வழங்க வேண்டும். பசு வளர்ப்பவர்கள் இவ்விரண்டையும் ஒரு அளவில் சேர்த்து பசுவிற்கு உணவாக கொடுப்பார்கள். எனவே பசு மாடு வளர்க்கும் இடத்திலோ அல்லது கோ ஆலைகளுக்கோ சென்று நாம் இந்த கொள்ளு மற்றும் புண்ணாக்கை தானமாக பசு மாடுகளுக்கு அளித்தால் அது நல்ல பலனை கொடுக்கும்.

ஏதாவது ஜாதக ரீதியாக தோஷம் இருக்கிறது. உங்களை கடனாளியாக கூடிய நேரம் உங்களுக்கு இருக்கிறது எனும் பட்சத்தில் கூட அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். உங்களால் எந்த அளவுக்கு வாங்கி கொடுக்க முடியுமோ இந்த எள்ளு புண்ணாக்கு வாங்கி உங்கள் கைகளால் அந்த பசுவை பராமரிப்பவர்கள் கையில் கொடுத்து விட்டால் அவர்கள் அதை தினம் தினம் பசு மாட்டிற்கு தேவையான அளவு கொடுத்து வருவார்கள்.

இந்த பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது படிப்படியாக நம் கடன் குறைந்து வருவதை நாம் காணலாம். ஒருவேளை ஒருவருக்கு கடனே இல்லை அவர்களின் கெட்ட நேரத்தால் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகிறது என்றாலும் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். எனவே இப்பதிவின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் இதனை செய்து கடனில்லா வாழ்வை வாழுங்கள்.

Recipes AMP · Quick view
View full