Advertisement
இனிப்பு பொருள்

தித்திக்கும் சேமியா பாயசம் செய்வது எப்படி ?

Advertisement

நாம் நம் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் சாப்பாடுன்று எடுத்து கொண்டால் கண்டிப்பாக இனிப்பு சேர்த்து கொள்ளுவோம். அதிலும் இனிப்புக்காக நாம் சேர்த்துக கொள்ளும் இனிப்பு என்றால் பாயசம் தான். பாயாசங்கள் பல வகைகளில் செய்வார்கள். ஆனால் பாரம்பரிய காலத்தில் இருந்து நம் உணவு சங்கிலியில் பாயாசத்திற்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்து வருகிறோம். ஆம், கல்யாண வீடுகளில் முக்கியமாக பாயாசம் பரிமாறுவார்கள் பருப்பு பாயாசம் இல்லை என்றால் சேமியா பாயாசம் இதில் ஏதேனும் ஒன்றை செய்து விடுவார்கள்.

இதையும் படியுங்கள் : தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் நாமும் வீடுகளிலும் பாயாசம் செய்வது அரிதாகவே தான் செய்கிறோம். முதலில் ஆவது பலர் வீடுகளில் பண்டிகை நாட்களில் பாயாசம் செய்வார்கள் ஆனால் இப்போது அதுவும் குறைந்துவிட்டது. ஆம், பண்டிகை நாட்கள் சுப நிகழ்ச்சி, கல்யாண வீடு போன்ற இடங்களில் மட்டும் பாயாசம் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை நீங்களும் வீட்டிலேயே பாயாசம் செய்து உங்களது ஆசை தீர சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்று சேமியா பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

சேமியா பாயாசம் | Semiya Payasam Recipe In Tamil

Print Recipe
நாமும் வீடுகளிலும் பாயாசம் செய்வது அரிதாகவே தான் செய்கிறோம். முதலில் ஆவது பலர் வீடுகளில் பண்டிகை நாட்களில் பாயாசம் செய்வார்கள் ஆனால் இப்போது அதுவும் குறைந்துவிட்டது. ஆம், பண்டிகை நாட்கள் சுப நிகழ்ச்சி, கல்யாண வீடு போன்ற இடங்களில் மட்டும் பாயாசம் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை நீங்களும் வீட்டிலேயே பாயாசம் செய்து உங்களது ஆசை தீர சாப்பிட்டுக் கொள்ளலாம். இன்று சேமியா பாயாசம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword semiya payasam, சேமியா பாயாசம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 6 Person
Calories 373
Author Prem Kumar

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • ½ குழிக்கரண்டி நெய்
  • 10 piece முந்திரி பருப்பு
  • 15 piece உலர் திராட்சை
  • ½ கப் சேமியா
  • 2 கப் தண்ணீர்
  • ½ கப் சக்கரை
  • 1 சிட்டிகை உப்பு
  • ½ கப் பால்
  • 3 piece ஏலக்காய்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றிக் கொள்ளுங்கள் நெய் சூடேறி வரும் வரை காத்திருந்து. நெய் சுடேறியவுடன் முந்திரி பருப்புகளை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
    Advertisement
  • முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுக்கவும் முந்திரி பருப்பு பொன்னிறமாக வந்தவுடன் உலர் திராட்சையும் சேர்த்து வதக்கவும்.
  • பின்பு ஒரு பவுளில் வறுத்த எடுத்த பொருள்களை எடுத்து வைத்துவிட்டு. அதே கடாயில் தீயை மட்டும் குறைத்து வைத்துவிட்டு சேமியாவே சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • சேமியாவும் பொன்னிறமாக வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். சேமியா பொன்னிறமாக மாறிய பின் தனியாக ஒரு பவுளில் சேமியாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் கடாயில் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதித்தவுடன் அதில் உப்பு வறுத்த சேமியாவையும் சேர்த்து கலக்கவும்.
  • இப்படியே சேமியா மென்மையாக வரும் வரை கொதிக்க விடவும் பின்பு இத்துடன் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
  • பின்பு இதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும் பால் நன்றாக சூடேறி கொதித்து வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்
  • பின் நாம் முதலில் நெய்யில் வறுத்து எடுத்து வைத்துள்ளார் முந்திரி பருப்பையும் உலர்திராட்சையும் இதனுடன் சேர்த்து கலக்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான சேமியா பாயாசம் தயாராகி விட்டது.

Nutrition

Serving: 6Person | Calories: 373kcal | Carbohydrates: 36.5g | Protein: 7.7g | Fiber: 0.1g

English Overview: Semiya payasam is one of the important sweet dishes in the Tamil marriage function. Semiya payasam Recipe or Semiya payasam Seivathu Eppadi or Semiya payasam recipe in Tamil are a few important terms to describe this recipe in the Tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

49 நிமிடங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

3 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

4 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

7 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

7 மணி நேரங்கள் ago