Advertisement
சட்னி

இட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் பீர்க்கங்காய் கடையல் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

இன்று நாம் கிராமத்து பக்கங்களில் வைக்கப்படும் ஒரு சுவையான பீர்க்கங்காய் சட்னி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் வழக்கமாக காலை, இரவு டிபன் உணவுகளான இட்லி, தோசை சப்பாத்தி போன்ற ரெசிபிகளுக்கு ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய் இருக்கும். இதற்கு பதிலாக நீங்கள் இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் அற்புதமாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?

Advertisement

இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும் ஆகையால் இதை நீங்கள் கண்டிப்பான முறையில் செய்து கொடுக்கலாம். மேலும் பீர்க்கங்காய் வயிற்றுப் பகுதியில் உடல் குடலை சுத்தப்படுத்தி நாம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதனால் இன்று இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

பீர்க்கங்காய் கடையல் சட்னி | Peerkangai Kadiyal Recipe in Tamil

Print Recipe
ஒரே மாதிரியான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற இந்த இரு வகை சட்னி வகைகளை மட்டும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே ஒரு கட்டத்தில் சலித்து போய் இருக்கும். இதற்கு பதிலாக நீங்கள் இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் அற்புதமாக இருக்கும். இந்த பீர்க்கங்காய் கடையல் சட்னி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும் ஆகையால் இதை நீங்கள் கண்டிப்பான முறையில் செய்து கொடுக்கலாம். மேலும் பீர்க்கங்காய் வயிற்றுப் பகுதியில் உடல் குடலை சுத்தப்படுத்தி நாம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 5 people
Calories 245

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 பருப்பு மத்து

Ingredients

  • 1 பீர்க்கங்காய் நறுக்கியது
  • 4 தக்காளி
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp சீரகம்
  • 1 tbsp மல்லி
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • ¾ tbsp சாம்பார் பொடி
  • உப்பு தேவையான அளவு
  • 1 ½ டம்பளர் தண்ணீர்
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் பீர்க்கங்காயின் தோல் பகுதியை உள்ள நாறை நன்கு சீவி சுத்தப்படுத்திவிட்டு பின்பு தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு தேர்வு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய்
    Advertisement
    நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் ஒரு டீஸ்பூன் மல்லி சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் நாம் தோலுரித்து வைத்திருக்கும் 15 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பின் வெங்காயம் நன்றாக கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நான் நறுக்கி வைத்திருக்கும் நான்கு தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தக்காளி நன்கு மசித்து வந்தவுடன், நாம் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயையும் சேர்த்து நான்கு கிளறி விடவும்.
  • பின் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், முக்கால் டீஸ்பூன் அளவு சாம்பார் பொடி மற்றும் கடைசியாக தேவையான அளவுக்கு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து கடாயை மூடி விடுங்கள். இப்படியாக ஒரு பத்து நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பத்து நிமிடம் கழித்து பீர்க்கங்காய் நன்றாக் வெந்து வந்ததும் கடாயை கீழ இறக்கி குளிர வைத்து பின். பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் கடையல் சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500கிராம் | Calories: 245kcal | Carbohydrates: 47g | Protein: 28g | Saturated Fat: 3.5g | Cholesterol: 1.09mg | Sodium: 45mg | Potassium: 428mg | Fiber: 1.4g | Sugar: 3.2g | Calcium: 21mg

English Overview: peerkangai chutney is one of the most important dishes in india. peerkangai chutney recipe or peerkangai chutney seivathu eppadi or peerkangai chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

55 நிமிடங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

2 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

6 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

16 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

18 மணி நேரங்கள் ago