Advertisement
அசைவம்

பாய் வீட்டு சுவையான ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது ?

Advertisement

இன்று நாம் இடியாப்பம் ஆப்பம் தோசை மற்றும் இட்லி போன்ற டிபன் வகை உணவுகளுடன் ஊற்றி சாப்பிடும் வகையில் பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட

இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையில் ஆட்டுகால் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த ஆட்டுக்கால் பெப்பர் பாயா அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும் அதனால் இன்று இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா | Pepper Paya Recipe in Tamil

Print Recipe
பொதுவாக காலை மற்றும் இரவு நேரங்களில் செய்யும் டிபன் வகை உணவுகளுக்கு வழக்கம்போல் சாம்பார் சட்னி என செய்து சாப்பிடுவதற்கு பதில் இதுபோன்ற ஒரு முறை இந்த பாய் வீட்டு ஆட்டுக்கால் பெப்பர் பாயா செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுபவர்கள். அடுத்த முறையும் இதே போல் செய்ய சொல்லி உங்களை தொந்தரவு செய்வார்கள். இந்த ஆட்டுக்கால் பெப்பர் பாயா அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும்
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Goat leg, ஆட்டுக்கால்
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 371

Equipment

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 ஆட்டுக்கால்
  • 2 tbsp எண்ணெய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp தனியா தூள்
  • 1/2 tsp மஞ்சள் தூள்
  • 4 tsp மிளகு தூள்
  • 2 கப் தேங்காய் பால்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பின்பு நாம் வைத்திருக்கும் காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    Advertisement
  • அதன் பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய வெங்காயம் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் வெங்காயம கண்ணாடி பதத்திற்கு வதக்கியதும்.
  • நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும் பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் ஆட்டுக்காலை சேர்த்து வதக்கவும்.
  • பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
  • அதன் பின் குக்கரை முடி வைத்து பத்து விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி கொள்ளவும். அதன் பின் குக்கர் மூடியைத் திறந்து பிரஷரை ரீலிஸ் செய்து கால் வெந்தவுடன்.
  • இதனுடன் இரண்டு கப் அளவு தேங்காய்பால் ஊற்றி பின் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பின் இறக்கும் முன் நான்கு ஸபூன மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். அவ்வளவு தானா சுவையான பெப்பர் பாயா தயார்.

Nutrition

Serving: 800gram | Calories: 371kcal | Carbohydrates: 2g | Protein: 4g | Fat: 1g | Saturated Fat: 0.1g | Cholesterol: 10mg | Sodium: 2mg | Potassium: 521mg | Fiber: 0.7g | Sugar: 0.1g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்…

2 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும்  அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…

3 மணி நேரங்கள் ago

சூப்பரான காய்கறி அவியல் ஈஸியா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒரு சூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய…

5 மணி நேரங்கள் ago

பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி…

6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல்…

7 மணி நேரங்கள் ago

மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

9 மணி நேரங்கள் ago