காரசாரமான ருசியில் ஒரு தரம் பூசணிக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சாதத்துடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்!

மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்

By Prem Kumar · 26/1/2024

மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். பல வீடுகளில் நான்கு, ஐந்து காய்களை தவிர மற்ற காய்கறிகளை சமைத்து இருக்கவே மாட்டார்கள் காய்கறி என்று சொன்னால் அனைத்து விதமான காய்கறிகளிலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே எந்த ஒரு காய்கறியையும் ஒதுக்குவது என்பது கூடாது. அவ்வாறு இந்த வெண்பூசணி காயையும் சமையலில் பயன்படுத்தலாம் என்பதே பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 15 நிமிடங்களில் அட்டகாசமான சுவையில் குழம்பு செய்து விடலாம். இந்த வெண் பூசணியை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், அல்வா போன்ற பலவித உணவுகளை சமைக்கலாம். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தை வெகுவாக குறைக்க முடிகிறது. பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூசணிக்காய் குழம்பு போல செய்து சாப்பிட நெஞ்சு சளி, சரும பாதிப்பு, சிறுநீரக கோளாறு, உடல் சூடு, பித்தம் போன்றவற்றை குணமாக்கி ஆயுளை அதிகரிக்கும். வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பூசணிக்காய் குழம்பு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

Recipes AMP · Quick view
View full