KFC சிக்கன் பாப்கார்ன் ரெசிபி இப்படி வீட்டிலயே கூட செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை.

By Prem Kumar · 4/11/2023

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அவ்வளவு இஷ்டம். சிக்கன் என்றால் பெரியவர் முதல் சிறியவர் வரை யாருக்குதான் பிடிக்காது. அதுவும் சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் செய்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். பாப்கார்ன் சிக்கன் பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ துரித உணவு வகை. அதிலும் குறிப்பாக KFC சிக்கனுக்கென்று ஒரு பெரிய பட்டாளமே அடிமை எனவும் கூறலாம்.

முதலில் அமெரிக்காவில் உதயமான இவை மெல்ல மெல்ல உலகம் முழுவதும் இதனின் மொரு மொருப்பு தன்மை மற்றும் அதீத சுவையால் மிகவும் பிரபலம் அடைந்தது. அத்தகைய KFC சிக்கனை வெளியில் சென்று சாப்பிட எண்ணம் இருப்பினும், விலை மிகவும் காஸ்ட்லியாக இருப்பதால் அளவோடு தான் சாப்பிட முடியும் மேலும் ஆர்டர் செய்து சிறிது நேரம் காத்திருந்து தான் சாப்பிட வேண்டும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை கடைகளில் சுவைத்திருப்போம். அப்படி கடைகளில் விற்கப்படும் ரெசிபிக்களை வீட்டிலும் செய்ய முயற்சிப்போம்.

உங்களுக்கு சிக்கனில் பாப்கார்ன் சிக்கன் பிடிக்குமா? அடிக்கடி இதை கடைகளில் வாங்கி சாப்பிடுவீர்களா? அப்படியானால் இனிமேல் அதை உங்கள் வீட்டிலேயே செய்து சுவையுங்கள். மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதை ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சுவையான, மொறுமொறு சிக்கன் பாப்கார்ன் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full