Advertisement
சைவம்

உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட செய்யலா என யோசிக்க வைக்கும் ருசியான சீஸ் பால்ஸ்!

Advertisement

பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளையுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள். இந்த மொறு மொறுப்பான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகளை கெட்சப்வுடன் சேர்த்து உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு பகோடா இப்படி செய்து பாருங்க! மாலை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்!

Advertisement

இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே இதை செய்து சுவைக்க முடியும். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்ய முடியும். அவசர கால கட்டங்களில் குறுகிய நேரத்தில் நாம் செய்து உண்ணக்கூடிய ஒரு சுவையான சிற்றுண்டி இவை.இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் | Potato Chees Balls Recipe in Tamil

Print Recipe
பொதுவாகவே உருளைக்கிழங்கை கொண்டு செய்யப்படும் அனைத்து உணவுகளையுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக தான் இருக்கும். அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள். இந்த மொறு மொறுப்பான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகளை கெட்சப்வுடன் சேர்த்து உண்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும்.இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே இதை
Advertisement
செய்து சுவைக்க முடியும். மேலும் சமைக்க தெரியாதவர்கள் கூட இதை வெகு எளிதாக செய்ய முடியும்.
Course snacks
Cuisine Indian, tamilnadu
Keyword potato snacks
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 5 People

Equipment

  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 50 கிராம் நறுக்கிய சீஸ்
  • 5 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • 2 மேஜைக்கரண்டி துருவிய சீஸ்
  • 3 தேக்கரண்டி மைதா மாவு
  • 2 மேஜைக்கரண்டி பிரட்
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  • சிறிதளவு கொத்தமல்லி இலை
  • தேவையான உப்பு
  • எண்ணெய் தேவையான
  • தண்ணீர் தேவையான

Instructions

  • சீஸ்சை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • கலந்த கலவையை தட்டையாக தட்டி அதனுள் சீஸ் கட்டியை வைத்து உருண்டையாக உருட்டவும்.
  • பிறகு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். உருட்டிய உருண்டையை அதில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • தயாராக வைத்துள்ள பிரெட் துகள்களில் மைதா மாவில் முக்கி எடுத்து உருண்டையை சேர்ந்து நன்றாக உருட்டவும்.
  • அனைத்து மாவையும் இதே போல் தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக சேர்த்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். தீயின் அளவை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் சுட சுட தயார்.
  • தக்காளி மற்றும் மிளகாய் சாஸுடன் பரிமாற சுவையாக இருக்கும்

Nutrition

Serving: 200g | Carbohydrates: 20.13g | Protein: 1.87g | Fat: 0.1g | Potassium: 379mg | Fiber: 1.8g | Vitamin C: 13mg | Calcium: 5mg | Iron: 0.31mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

5 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

18 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago