உருளைக்கிழங்கு கார கறி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

உருளைக்கிழங்கு அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது என்ன காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு தான் ஆசைப்படுவார்கள். உருளைக்கிழங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அந்த வகையில உருளைக்கிழங்கு மசியல், உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்

By Prem Kumar · 13/4/2025

உருளைக்கிழங்கு அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது என்ன காய்கறிகள் இருந்தாலும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு தான் ஆசைப்படுவார்கள். உருளைக்கிழங்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அந்த வகையில உருளைக்கிழங்கு மசியல், உருளைக்கிழங்கு வறுவல், உருளைக்கிழங்கு பொரியல், உருளைக்கிழங்கு மிளகு வறுவல், உருளைக்கிழங்கு பட்டாணி கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் இருக்கு. எது செஞ்சு கொடுத்தாலும் உருளைக்கிழங்கு அப்படின்னா விரும்பி சாப்பிடலாம்.

அப்படி இருக்கும் போது இன்னைக்கு நம்ம கடலை மாவு சாம்பார் பொடி சேர்த்து கொஞ்சம் வித்தியாசமா சிம்பிளா உருளைக்கிழங்கு காரக்கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த உருளைக்கிழங்கு காரக் கறி செய்றதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. நிறைய பொருட்கள் தேவைப்படாது. இதுல தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்றதால வாசனை ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.

சுவையான இந்த உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபிக்கு எல்லாரும் அடிமையாகிடுவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்ட்டா இருக்கும். உருளைக்கிழங்கு கார கறியை ரசம் சாதம் சாம்பார் சாதம் பருப்பு சாதம் லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கும். உருளைக்கிழங்கு இருந்துச்சுன்னா போதும் குழந்தைகள் சாப்பாட்டை மீதம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள். ஏதாவது சிம்பிளான சாதம் குழந்தைகளுக்கு வைக்கும் போது இந்த மாதிரி ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு காரக் கறி ரெசிப்பியை வைத்து கொடுத்தால் மீதம் வைக்காமல் சாப்பிட்டு வந்துடுவாங்க.

அதனால அவங்க லஞ்ச் பாக்ஸுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க. ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. தாளிப்புக்கு கடுகு உளுந்தம் பருப்பு நிறைய சேர்த்து கடலைப்பருப்பும் நிறைய சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக்கி அதுக்கப்புறம் இதை செய்யும்போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு காரக்கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full